சன்னி லியோன் 42 படங்களை இயக்கியுள்ளாராம், அத்தனையுமே...
மும்பை: பாலிவுட் நடிகை சன்னி லியோன் 42 படங்களை இயக்கி உள்ளாராம்.
வெளிநாட்டில் ஆபாச படங்களில் நடித்து வந்த சன்னி லியோன் தற்போது பாலிவுட்டில் செட்டிலாகிவிட்டார். சன்னிக்கு நடிப்பு வராது என்று பாலிவுட்டில் கிண்டல் செய்தார்கள்.
இதை பார்த்த சன்னி நடித்துக் காண்பிக்கிறேன் பாருங்கள் என்று தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.

42 படங்கள்
சன்னி பாலிவுட்டுக்கு வருவதற்கு முன்பு 42 படங்களை இயக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. அவை அனைத்தும் ஆபாச படங்களாம். சன்னி தான் இயக்கிய 42 படங்களில் 41ல் நடித்துள்ளாராம்.

சன்னி லியோன்
இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான சன்னி லியோன் அப்படியே மும்பையில் செட்டிலாகிவிட்டார். ஜிஸ்ம் 2 படத்தில் நடித்து பாலிவுட்டின் கவனத்தை ஈர்த்தார்.

கணவர்
மும்பையில் வசித்து வரும் சன்னி தனது கணவர் டேனியல் வெபருடன் சேர்ந்து நிஷா என்ற பெண் குழந்தையை தத்தெடுத்துள்ளார். நிஷா வளர்ந்த பிறகு அவரின் உண்மையான பெற்றோர் தாங்கள் இல்லை என்பதை தெரிவிப்பாராம்.

சன்னி நைட்ஸ்
புத்தாண்டையொட்டி பெங்களூர் மான்யதா டெக் பார்க்கில் சன்னி லியோன் நைட்ஸ் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தியதையடுத்து நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











