என்னங்க சொல்றீ்ங்க..கேரளாவுக்கு சன்னி லியோன் 5 கோடி கொடுத்தாரா!!!!
சன்னி லியோன் கேரளாவுக்கு ரூ.5 கோடி வழங்கியதாகக் கூறப்படுகிறது
மும்பை: பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் கேரள மக்களுக்கு ரூ.5 கோடி நிதி வழங்கியதாக புரளி பரவி வருகிறது.
அடல்ட் பட நடிகையாக திரைவாழ்க்கையைத் துவங்கி, இன்று பாலிவுட்டில் செட்டிலாகியுள்ளவர் சன்னி லியோன்.

இவருடைய வாழ்க்கை கரஞ்சித் கவூர் என்ற பெயரில் வெப் சீரீஸாகத் தயாரிக்கப்பட்டுள்ளது.
அவர் இப்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு ரூ. 5 கோடி அளித்துள்ளதாக புரளி பரவி வருகிறது. தென் மேற்கு பருவமழையின் சீற்றத்தால் சீர்குலைந்துள்ள கேரளாவிற்கு பல முனைகளிலிருந்தும் உதவிகள் வந்துகொண்டிருக்கின்றன.
நடிகர் ரஜினிகாந்த் ரூ. 15 லட்சம், சூர்யா, கார்த்தி ரூ. 25 லட்சம், கமல்ஹாசன் ரூ. 10 லட்சம் என பலரும் தங்களுடைய பங்களிப்பை கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு கொடுத்துள்ளனர்.
அந்த வகையில் நடிகை சன்னி லியோன் ரூ. 5 கோடியை கேரள மக்களுக்காக வழங்கியதாக சமூக வலைதளங்களில் சொல்லப்படுகிறது. ஆனால் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு கடைத்திறப்பு விழாவுக்காக கொச்சி வந்த சன்னி லியோன் ரசிகர்களின் அன்பில் திக்குமுக்காடிப்போனார். அப்படி அன்பு செலுத்திய கேரள ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த உதவியை செய்துள்ளார் என்றும் சொல்கின்றனர்.


Click it and Unblock the Notifications











