இது என்னடா கொடுமை: நிஜப் பெயரால் சன்னி லியோனுக்கு வந்த சோதனை

By Siva

மும்பை: தனது பெயரால் பிரச்சனையில் சிக்கியுள்ளார் நடிகை சன்னி லியோன்.

கனடாவில் பிறந்து வளர்ந்த இந்தியரான சன்னி லியோன் ஆபாசப் படங்களில் நடித்து பிரபலமானவர். தற்போது பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தும் அவரின் வாழ்க்கை வரலாறு கரன்ஜித் கவுர்: தி அன்டோல்ட் ஸ்டோரி என்ற பெயரில் வெப் சீரீஸாக வருகிறது.

Sunny Leone faces issue because of her name

அந்த நிகழ்ச்சியின் தலைப்பில் இருந்து கவுர் என்ற பெயரை நீக்க வேண்டும் என சில சீக்கிய அமைப்புகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். ஆபாசப்பட நடிகை பற்றிய தொடரில் சீக்கிய பெயர் இருப்பதை அவமரியாதையாக நினைக்கிறார்கள் சீக்கியர்கள்.

சன்னி லியோன் பற்றிய தொடருக்கு சீக்கியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதை பார்த்து பிரபலங்களும், பொது மக்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சன்னி ஆபாசப் பட நடிகை என்பதால் தான் இத்தனை பிரச்சனை செய்கிறார்கள் என்று நெட்டிசன்ஸ் தெரிவித்துள்ளனர்.

ஆண் எது வேண்டுமானாலும் செய்யலாம் ஆனால் பெண் செய்யக் கூடாதா என்று கேள்வி எழுப்பியுள்ளனர். சுக்விந்தர் கவுர் தனது பெயரை ராதே மா என்றும், குர்மீத் சிங் பாபா ராம் ரஹீம் என்றும் பெயரை மாற்றியபோது யாருமே எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அப்படி இருக்க சன்னி லியோன் கரன்ஜித் கவுர் என்கிற தனது நிஜப் பெயரை பயன்படுத்த ஏன் இத்தனை பிரச்சனை? பெயரில் என்ன உள்ளது? சன்னி எந்த குற்றமும் செய்யவில்லையே என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X