விலங்குகளை நேசிக்கும் சன்னி லியோன்.. அந்த ஒட்டகசிவிங்கிக்கு எப்படி ஊட்டி விடுறாரு பாருங்க!

மும்பை: கேரளாவில் கர்ப்பிணி யானைக்கு அன்னாசி பழத்தில் வெடி வைத்து கொன்ற சம்பவம் நாட்டையே உலுக்கி வரும் நிலையில், வன விலங்குகளுடன் கொஞ்சி விளையாடுகிறார் நடிகை சன்னி லியோன்.

பீட்டாவின் உறுப்பினராகவும், அசைவ உணவுகளை உண்ணாமலும் வெகு காலமாக இருந்து வருகிறார் இந்த பாலிவுட்டின் கவர்ச்சி கன்னி.

லாக்டவுன் நேரத்தில் அமெரிக்காவுக்கு தனது குழந்தைகள் மற்றும் கணவருடன் பறந்து அங்குள்ள தங்களது பண்ணை வீட்டில் ஹாயாக பொழுதை கழித்து வருகிறார்.

ஒட்டகசிவிங்கிக்கு உணவு

ஒட்டகசிவிங்கிக்கு உணவு

கொரோனா வைரஸ் மற்றும் பிளாக் லிவ்ஸ் மேட்டர் எனும் இரண்டு பெரிய பிரச்சனைகள் அமெரிக்காவில் நடந்து கொண்டிருக்கும் நிலையில், அவற்றுக்கு நடுவே வன விலங்குகளை சந்தித்து, அவற்றுக்கு உணவளித்து நேரத்தை செலவிடும் தருணம் கிடைத்ததற்கு தான் ரொம்ப கொடுத்து வைத்துள்ளேன் என நடிகை சன்னி லியோன் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

குவிகிறது பாராட்டுக்கள்

குவிகிறது பாராட்டுக்கள்

இன்ஸ்டாகிராமில் 36 மில்லியன் ரசிகர்களை உலகளவில் கொண்டுள்ள கவர்ச்சி கன்னி சன்னி லியோனின் இந்த பதிவை பார்த்த அவரது ரசிகர்கள், மனிதர்களை போலவே விலங்குகளையும் நேசிக்கும் உங்கள் சேவை தொடரட்டும் என லட்சக்கணக்கான லைக்குகளை தட்டி பாராட்டி வருகின்றனர்.

கலக்கல் போஸ்டர்

கலக்கல் போஸ்டர்

மேலும், தனது சமூக வலை தள பக்கங்களில் கிளாம் டாலாக மாறி செம கலக்கல் போஸ்டர்களையும் வெளியிட்டு வைரலாக்கி வருகிறார் நடிகை சன்னி லியோன். டார்க் வைலட் நிறத்தில் டாப்ஸ் மற்றும் சின்ன ஷார்ட்ஸ் அணிந்து கொண்டு கூலர்ஸ் போட்ட படி செம கூலாக போஸ் கொடுத்துள்ளார்.

தங்கமே

தங்கமே

சன்னி லியோனின் இந்த புகைப்படங்களை பார்த்து பாலிவுட் ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் ரசிகர்களும் ஏகத்துக்கு கமெண்ட்டுகளை தெறிக்க விட்டு வருகின்றனர். ‘தங்கமே' என சன்னி லியோனின் க்யூட் போட்டோவை பதிவிட்டு, இந்த தீவிர சன்னி லியோன் ரசிகர் பதிவிட்டுள்ள கமெண்ட்டுக்கே எக்கச்சக்க லைக்குகள் குவிந்து வருகின்றன.

Recommended Video

Sunny Leone Birthday Bash | Special video of for Sunny fans
தலைவி

தலைவி

நீச்சல் குளத்தில் பிங்க் நிற பிகினி உடையில் சொட்ட சொட்ட நனைந்து வெளியே நடந்து வரும் சன்னி லியோனின் படு ஹாட் போட்டோவை போட்டு மற்றொரு சன்னி லியோன் ரசிகர் ‘தலைவி' என சன்னி லியோன் தற்போது பதிவிட்டுள்ள கலர்ஃபுல்லான கலக்கல் போஸ்டருக்கு கீழே கமெண்ட்டுகளை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X