சன்னி லியோனுக்கு 40 வயசாகிடுச்சு.. இந்த கொரோனா காலத்துல எப்படி உதவி பண்றாரு தெரியுமா?
மும்பை: கவர்ச்சி நடிகை சன்னி லியோன் இன்று தனது 40வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
ஆபாச பட நடிகையாக இருந்து வந்த சன்னி லியோன், கடந்த 2012ம் ஆண்டு ஜிஸ்ம் 2 படத்தின் மூலம் பாலிவுட்டில் கவர்ச்சி நடிகையாக அறிமுகமானார்.
இந்த கொரோனா காலக்கட்டத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தினமும் உணவு வழங்கும் தொண்டாற்றி வருகிறார்.

40 வயசாகிடுச்சு
1981ம் ஆண்டு மே 13ம் தேதி பிறந்த கரன்ஜித் கவுர், ஆபாச படங்களில் நடிக்கும் போது தனது பெயரை சன்னி லியோன் என மாற்றிக் கொண்டார். கனடாவில் வளர்ந்து வந்த சன்னி லியோன், உலகம் முழுக்க பிரபலமானார். இன்று தனது 40வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் சன்னி லியோன்.

தலைவிக்கு வாழ்த்து
இந்திய கூகுள் தேடலில் தொடர்ந்து பல ஆண்டுகளாக முதல் இடத்தை பிடித்து வந்த சன்னி லியோனை ஏகப்பட்ட ரசிகர்கள் தங்கள் தலைவியாகவே நினைத்து கொண்டாடி வருகின்றனர். இன்று பிறந்தநாள் கொண்டாடும் சன்னி லியோனை வாழ்த்தி #HappyBirthdaySunnyLeone என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி காமன் டிபியை எல்லாம் வெளியிட்டு அதகளம் செய்து வருகின்றனர்.

கவர்ச்சிக் கன்னி
பாலிவுட்டில் தொடர்ந்து கிளாமர் படங்களிலேயே நடித்து இந்தியாவின் கவர்ச்சிக் கன்னியாக மாறி உள்ளார் சன்னி லியோன். 45 மில்லியன் ரசிகர்களை இன்ஸ்டாகிராமில் கொண்டுள்ள இவர் தனது ரசிகர்களை குஷிப்படுத்த அவ்வப்போது ஹாட்டான போட்டோக்களை பதிவிட்டு இணையத்தை சூடாக்கி வருகிறார்.

அழகான குடும்பம்
தன்னுடன் பணியாற்றிய ஆபாச நடிகர் டேனியல் வெப்பரையே காதலித்து திருமணம் செய்து கொண்ட சன்னி லியோன், நிஷா கவுர் எனும் மகளை தத்தெடுத்தார். பின்னர் வாடகைத் தாய் மூலமாக ஆஷர் மற்றும் நோவா எனும் இரு ஆண் குழந்தை பெற்று வளர்த்து வருகிறார். குழந்தைகளுடன் அதிகமான நேரத்தை செலவழித்து வருகிறார் சன்னி லியோன்.

10 ஆயிரம் பேருக்கு உணவு
கொரோனா பாதிப்பு இந்தியாவில் மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், ஏகப்பட்ட நடிகர்களும் நடிகைகளும் மக்களுக்கு ஏதோ ஒரு வகையில் உதவி வருகின்றனர். நடிகை சன்னி லியோன் பீட்டா நிறுவனத்துடன் இணைந்து 10 ஆயிரம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு வழங்கி வருகிறார்.
Recommended Video

பசியால் வாடக்கூடாது
இது தொடர்பாக நடிகை சன்னி லியோன் அளித்த பேட்டியில், நாடே இக்கட்டான சூழலில் இருக்கும் போது, ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது. அதனால், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பசியால் வாடக் கூடாது என்பதற்காக அவர்களுக்கு தினமும் சத்தான சைவ உணவு மற்றும் பழங்களை வழங்கி வருகிறோம் என்றார்.

நல்ல மனசு
ஏகப்பட்ட குழந்தைகளை தத்தெடுத்தும், கொரோனா நோயாளிகளுக்கான மருத்துவ படுக்கை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தும் ஏகப்பட்ட சேவையை செய்து வரும் நல்ல மனசு கொண்ட சன்னி லியோனுக்கு அவரது ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். விரைவில் சன்னி லியோன் நடிப்பில் உருவாகி வரும் ஷீரோ எனும் படம் மலையாளம், தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் ரிலீசாக உள்ளது.


Click it and Unblock the Notifications











