twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பண மோசடி புகார்.. கேரள ஐகோர்ட்டில் முன் ஜாமீன் கேட்டு நடிகை சன்னி லியோன் மனு!

    By
    |

    திருவனந்தபுரம்: மோசடி புகார் வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க, நடிகை சன்னி லியோன் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.

    பாலியல் படங்களில் நடித்து வந்த சன்னி லியோன், பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார், இப்போது.

    இந்த 4 பேர்ல அந்த வாய்ப்பு யாருக்கு போகப் போகுதோ? தல 61 படத்தை சுற்றி சுழலும் போட்டா போட்டி!இந்த 4 பேர்ல அந்த வாய்ப்பு யாருக்கு போகப் போகுதோ? தல 61 படத்தை சுற்றி சுழலும் போட்டா போட்டி!

    தமிழில், ஜெய், ஸ்வாதி நடித்த வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார்.

    நாடு முழுவதும்

    நாடு முழுவதும்

    2012 ஆம் ஆண்டு பூஜா பட் இயக்கிய ஜிஸ்ம் 2 என்ற படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமான அவர், ஜாக்பாட், ராகிணி எம்.எம்.எஸ் 2, ஹேட் ஸ்டோரி 2 உட்பட பல படங்களில் நடித்தார். மலையாளத்திலும் நடித்துள்ள சன்னி லியோனுக்கு நாடு முழுவதும் எக்கச்சக்க ரசிகர்கள்.

    குடும்பத்துடன் கேரளா

    குடும்பத்துடன் கேரளா

    டிவி நிகழ்ச்சி ஒன்றின் படப்பிடிப்புக்காக கேரளாவுக்கு குடும்பத்துடன் சென்றுள்ளார் சன்னி லியோன். இந்நிலையில் கேரள மாநிலம் பெரும்பாவூரைச் சேர்ந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஸ்ரீயாஸ் என்பவர், கேரள டிஜிபியிடம் நடிகை சன்னி லியோன் மீது பண மோசடி புகார் அளித்தார். அதில், 'சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நடிகை சன்னி லியோனை ஒப்பந்தம்

    சொகுசு விடுதி

    சொகுசு விடுதி

    இதற்காக ரூ.29 லட்சம் அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது. பணத்தைப் பெற்றுக்கொண்ட சன்னி லியோன், நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை' என்று கூறியிருந்தார். இதையடுத்து கேரள குற்றப்பிரிவு போலீசார், திருவனந்தபுரத்தில் தனியார் சொகுசு விடுதியில் தங்கியிருக்கும் சன்னி லியோனிடம் விசாரணை நடத்தினர்.

    புரிந்து கொள்கிறேன்

    புரிந்து கொள்கிறேன்

    இந்நிலையில், தனது புகாரை மறுத்துள்ள சன்னி லியோன், ஒரு நடிகையாக என் வேலையை நான் மதிக்கிறேன் என்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களின் அவதூறான புகார் மற்றும் முறையற்ற நடத்தைகளால் ஆழ்ந்த வேதனை ஏற்படுகிறது என்று கூறியிருந்தார்.

    உயர் நீதிமன்றம்

    உயர் நீதிமன்றம்

    இந்நிலையில், இப்போது கேரள உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள், பலமுறை நிகழ்ச்சியை ஒத்தி வைத்தனர். பிறகு பஹ்ரைனில் நடப்பதாகக் கூறினார்கள். ஆனால், நடக்கவில்லை.

    மோசடி வழக்கு

    மோசடி வழக்கு

    2019 ஆம் ஆண்டு காதலர் தினத்தில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்தேன். ஒப்பந்தத்தின் படி எனக்குச் சம்பளம் தர மறுத்துவிட்டனர். அதனால் அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இதனால், எனக்கு எதிராக மோசடி வழக்கு தொடர்வது பொருந்தாது என்று கூறியுள்ளார்.

    English summary
    Sunny Leone, who was booked in a cheating case, has moved an anticipatory bail plea in the High Court here on Tuesday.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X