‘வடகறி’யில் சன்னி லியோன் குத்தாட்டம்!?
மும்பை: கவர்ச்சிப் படங்களில் நடிப்பது த்ரில்லாகவும், மகிழ்ச்சி அளிப்பதாகவும் இருப்பதாகத் தெரிவித்துள்ளார் பிரபல நடிகை சன்னிலியோன்.
வெளிநாடுகளில் நீலப்படங்களில் நடித்து பிரபலமானவர் சன்னி லியோன். இவரது நூற்றுக்கும் மேற்பட்ட நீலப்படங்கள் இன்றளவும் இணையத்தில் பிரபலமாக உள்ளது.
சன்னிலியோன் தற்போது இந்திப்படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். இவரை தமிழில் ஜெய்-சுவாதி நடிப்பில் தயாராகும் 'வடகறி' படத்தில் குத்துப் பாடலுக்கு ஆட வைக்க முயற்சிகள் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் மும்பையில் நடந்த கலைநிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சன்னிலியோன், நிகழ்ச்சி முடிவில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;

எதிர்பார்ப்பு....
நான் நடித்த மூன்றாவது படம் ராகினி எம்எம்2 இந்த படம் திரையில் விரைவில் வெளிவர இருக்கிறது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.

வரவேற்பு...
நான் ஏற்கனவே இரண்டு படங்களில் நடித்து உள்ளேன் .ஜாக்பாட் அதனை தொடர்ந்து ஜிஎஸ்ம்-2 ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

மார்ச் 21 ரிலீஸ்...
அதனை தொடர்ந்து நான் நடித்துள்ள மூன்றாவது படமான ராகினி எம்எம்2 வரும் மார்ச் 21 தேதி திரைக்கு வர இருக்கிறது.இந்த படத்தில் திவ்யா தத்தா, பர்வீன் டாபா ஆகியோர் நடித்துள்ளனர்.

திரில் கதாபாத்திரங்கள்....
திரில்லான கதாபாத்திரங்களில் நடிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும் கதாபாத்திரத்திற்க்கு ஏற்றார்போலவே நான் நடிப்பேன்.

கதாபாத்திர விளக்கம்...
படத்தின் கதாபாத்திரம் பற்றி எனக்கு தெரியாது. கதாபாத்திரகளில் நடிப்பது பற்றி இயக்குநர் தெரிவித்தால் அதை முழுமையாக படித்துவிட்டு நடிப்பேன்' என்றார்.

கவர்ச்சியாக நடிப்பது மகிழ்ச்சி...
மேலும், ‘படங்களில் மிகவும் செக்சியான வேடங்களில் நடித்தீர்களே அது குறித்து உங்களுக்கு பயம் ஏதும் இல்லையா என்ற செய்தியாளரின் கேள்விக்கு ‘கவர்ச்சியாக ஏன் நடிக்க கூடாது. கவர்ச்சியாக நடிப்பது தான் எனக்கு பிடிக்கும் என்று இது போன்ற படங்களில் நடிப்பது திரில்லாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும்' எனப் பதிலளித்தார் சன்னி லியோன்.


Click it and Unblock the Notifications











