கணவருடன் அப்படியொரு லிப் லாக்.. வைரலாகும் சன்னி லியோனின் புகைப்படங்கள்.. இது வேற லெவல் ஹோலி!
மும்பை: கணவர் மற்றும் குழந்தைகளுடன் ஹோலி கொண்டாடிய புகைப்படங்களை நடிகை சன்னி லியோன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்.
போன சம்மருக்கு தொடர்ந்து ஹாட் போட்டோக்களாக களமிறக்கிய சன்னி லியோன், இந்த கோடைக்கு எந்த கவர்ச்சி கொடையும் கொடுக்கவில்லையே என ஏங்கிய ரசிகர்களுக்காக, ஸ்பெஷல் லிப் லாக் போட்டோ ஒன்றையும் போட்டுள்ளார்.
உடல் முழுக்க கலர் பூசிக் கொண்டு, நனைந்த கோலத்தில் இருக்கும் போட்டோக்களுக்கு லட்சக் கணக்கில் லைக்குகள் குவிகின்றன.

ஹோலி கொண்டாட்டம்
தீபாவளி பண்டிகைக்கு நிகராக நாடு முழுவதும் ஹோலி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. ஏகப்பட்ட பிரபலங்கள் ஹோலி கொண்டாட்டத்தை முடித்த கையோடு தங்களின் போட்டோக்களை இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டு லைக்குகளை அள்ளி வருகின்றனர். நடிகை சன்னி லியோனும் இந்த ஆண்டு செம சூப்பராக ஹோலி கொண்டாடி உள்ளார்.

குழந்தைகளுடன் கொண்டாட்டம்
ஹோலி பண்டிகை குழந்தைகள் மற்றும் கணவர் டேனியல் வெப்பருடன் நடிகை சன்னி லியோன் கொண்டாடியுள்ளார். நீல நிற சுடிதார் அணிந்து கொண்டு உடல் முழுக்க வண்ணம் பூசியபடி இருக்கும் சன்னி லியோனின் போட்டோக்களுக்கு ஏகப்பட்ட லைக்குகளும் கமெண்ட்டுகளும் குவிந்து வருகின்றன.

செம அட்டகாசம்
சன்னி லியோனின் மகள் நிஷா, மகன்கள் ஆஷர் மற்றும் நோஹா உள்ளிட்ட குழந்தைகளும் ஹோலி பண்டிகையை முன்னிட்டு வண்ணப் பொடிகள் மற்றும் வாட்டர் கன்களை வைத்து செம அட்டகாசம் செய்து ஹோலி கொண்டாடிய போட்டோக்கள் பார்க்கவே ரசிகர்களுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும் விதமாக அமைந்துள்ளது.

சம்மர் வந்துடுச்சு
சன்னி லியோனின் ஹோலி கொண்டாட்ட போட்டோக்களை பார்த்த ரசிகர்கள், சம்மர் வந்துடுச்சு, இன்னமும் செக்ஸியான போட்டோக்களை ஏன் போடவில்லை என கேள்வி எழுப்பி வருகின்றனர். கடந்த ஆண்டு லாக்டவுனில் இருக்கும் போது, சம்மரை முன்னிட்டு தினமும் ஒரு ஹாட்டான போட்டோவை போட்டு அதகளம் செய்தார் சன்னி லியோன்.

வேற லெவல் லிப் லாக்
முன்னாள் ஆபாச பட நாயகியான சன்னி லியோன் சும்மா வெறும் ஹோலி கொண்டாட்ட போட்டோக்களை மட்டும் போட்டால் தனது ரசிகர்கள் போராகி விடுவார்கள் என கணவர் டேனியல் வெப்பருடன் ஹாட்டான லிப் லாக் அடிக்கும் போட்டோ ஒன்றையும் போட்டு 16 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை அள்ளி உள்ளார்.


Click it and Unblock the Notifications











