அமெரிக்காவில் இருந்து.. 6 மாதத்துக்கு பின் மும்பை திரும்பிய சன்னி லியோன்.. புதிய சாகசமாமே!
மும்பை: கொரோனா காரணமாக அமெரிக்காவில் வசித்து வந்த சன்னி லியோன், 6 மாதத்துக்குப் பிறகு மும்பை திரும்பியுள்ளார்.
பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார், நடிகை சன்னி லியோன். 2012 ஆம் ஆண்டு பூஜா பட் இயக்கிய ஜிஸ்ம் 2 என்ற படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமானார்.
தொடர்ந்து ஜாக்பாட், ராகினி எம்.எம்.எஸ் 2, ஹேட் ஸ்டோரி 2 உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

எக்கச்சக்க ரசிகர்கள்
மலையாளத்தில் மதுரராஜா என்ற படத்தில் ஒரு பாடல் காட்சியில் நடித்திருந்தார். தமிழில், ஜெய், ஸ்வாதி நடித்த வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்த சன்னி லியோனுக்கு இந்தியா முழுவதும் எக்கச்சக்க ரசிகர்கள். சமூக வலைதளங்களில் வெளியிடும் போட்டோக்களால் எப்போதும் பரபரப்பாகவே இருந்து வருகிறார்.

ஆசேர், நோவா சிங்
இவரது கணவர் டேனியல் வெபர். நிஷா என்ற பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்க்கும் சன்னி, வாடகைத்தாய் மூலம் பெற்ற ஆசேர் மற்றும் நோவா சிங் என்ற குழந்தைகளையும் வளர்த்து வருகிறார். இந்நிலையில் இவர், இப்போது மீண்டும் ஒரு மலையாளப் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

மடோனா ஹீரோயின்
இந்தப் படத்துக்கு ரங்கீலா என்று டைட்டில் வைத்துள்ளனர். இதையடுத்து சுதீப் நடிக்கும் கோடிகோப்பா 3 படத்தில் ஒரு பாடலுக்கு ஆட இருக்கிறார். இந்தப் படம் இந்தி, தமிழ் உள்பட சில மொழிகளில் உருவாகிறது. மடோனா செபாஸ்டியன் ஹீரோயினாக நடிக்கிறார். ஸ்ரத்தா தாஸ், அப்தாப் ஷிவதசானி, நவாப் ஷா உள்பட பலர் நடிக்கின்றனர்.

ஸ்பெஷல் பிளைட்
இதில் ஒரு பாடலுக்கு ஆட இருக்கும் சன்னி லியோன், இந்தப் படத்தில் நடனம் ஆட ஆர்வமாக இருக்கிறேன். இதன் பாடல் காட்சி அழகியலுடன் படமாக்க இருக்கிறது என்று கூறியிருந்தார் சன்னி லியோன். கொரோனா தீவிரம் அடைந்தபோது மும்பையில் இருந்த சன்னி லியோன், பிறகு சிறப்பு விமானம் மூலம் அமெரிக்கா சென்றுவிட்டார்.

இன்ஸ்டாவில் அடிக்கடி
அங்கு லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்த அவர், அடிக்கடி இன்ஸ்டாகிராமில், அதிரடி கிளாமர் மற்றும் பிகினி போட்டோக்களை பதிவு செய்து வந்தார். இந்நிலையில், ஆறு மாதத்துக்குப் பிறகு அவர் மும்பை திரும்பி இருக்கிறார். இதுபற்றி இன்ஸ்டாவில், விமானத்தில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, 6 மாதத்துக்குப் பின் மும்பை திரும்பும் நேரம் வந்துவிட்டது. புதிய சாகசம் என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











