»   »  பெண்கள் சமையலை விட்டுட்டு இன்பம் கொடுக்க பயிற்சி எடுக்க வேண்டும்: நடிகை பேட்டி

பெண்கள் சமையலை விட்டுட்டு இன்பம் கொடுக்க பயிற்சி எடுக்க வேண்டும்: நடிகை பேட்டி

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ராம் கோபால் வர்மாவின் சர்சசை கருத்துக்கு தான் முழு ஆதரவு அளிப்பதாக பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் தெரிவித்துள்ளார். பெண்கள் சமையல் வேலையை விட்டுவிட்டு இன்பம் கொடுப்பது எப்படி என்று பயிற்சி வகுப்புகளுக்கு செல்ல வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் ராம் கோபால் வர்மா மகளிர் தின வாழ்த்து தெரிவித்து ட்வீட்டி சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவர் தனது ட்வீட்டில், உலகில் உள்ள அனைத்து பெண்களும் சன்னி லியோன் போன்று ஆண்களுக்கு மகிழ்ச்சியை தர வேண்டும் என விரும்புகிறேன் என தெரிவித்தார்.

இதையடுத்து ஆளாளுக்கு ராம் கோபால் வர்மாவை கழுவிக் கழுவி ஊத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் இது குறித்து பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் கூறுகையில்,

ஆதரவு

ஆதரவு

நான் ராம் கோபால் வர்மாவுக்கு முழு ஆதரவு அளிக்கிறேன். அவர் கூறியது மிகவும் சரி. அவர் சன்னி லியோனை புகழ்ந்துள்ள விஷயத்தில் என் ஆதரவு அவருக்கே.

பெண்கள்

பெண்கள்

பெண்கள் சமையல் வேலையை விட்டுவிட்டு இன்பம் கொடுப்பது எப்படி என்று பயிற்சி வகுப்புகளுக்கு செல்ல வேண்டும். ராம் கோபால் வர்மா தனது ட்வீட்டுக்காக மன்னிப்பு கேட்டிருக்கக் கூடாது.

உண்மை

உண்மை

ராம் கோபால் வர்மா கூறியது அனைத்தும் உண்மை. நான் அவரை ஆதரிக்கிறேன். ஒரு ஆண் தனது மனைவியுடன் சேர்ந்து பல ஆண்டுகள் வாழ்கிறார். ஒரு அழகான பெண் அந்த ஆணின் வாழ்க்கையில் வந்தால் அவர் மனைவியை மறந்துவிடுகிறார் என ராக்கி தெரிவித்துள்ளார்.

ராக்கி

ராக்கி

ராக்கி சாவந்திற்கு சன்னி லியோனை கண்டாலே பிடிக்காது. பேட்டி கொடுக்கும் போது எல்லாம் அவரை தாக்கிப் பேசுவார். இந்நிலையில் தான் அவர் ராம் கோபால் வர்மாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Bollywood actress Rakhi Sawant has supported director Ram Gopal Varma over the controversial tweets. She has even advised woman to take coaching classes on how to give pleasure.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil