சன்னி லியோனுடன் இணைந்த ஆண்ட்ரியா... எந்த விஷயத்தில் தெரியுமா?
தமிழ்நாட்டு சன்னி லியோன் ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி. சன்னி லியோன் தரிசனம் சென்னையில் கிடைக்கவிருக்கிறது.
பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன் பாலிவுட்டில் அறிமுகமாகி முன்னணி ஹீரோயினாகவே மாறி விட்டார்.

சன்னி லியோனுக்கு தென் இந்தியாவிலும் நல்ல வரவேற்பு இருக்கிறது. அண்மையில் கேரளாவில் ஒரு நிகழ்ச்சிக்கு வந்தவரை பார்க்க கூடிய கூட்டம் நாட்டையே அதிர வைத்தது. இன்னும் சில நாட்களில் சென்னைக்கு வரவிருக்கிறாராம் சன்னி.
டிசம்பர் முதல் வாரம் ஆண்ட்ரியா இசை நிகழ்ச்சி ஒன்றை சென்னையில் நடத்தவிருக்கிறார். ஆண்ட்ரியா பாடிய பாடல்களுக்கு நடனம் ஆடப்போகிறவர் சன்னி லியோன். ஏற்கனவே தமிழில் சன்னி லியோன் ஒரு பாடலுக்கு ஆடிய வடகறி படத்தின் பாடலுக்கு குரல் கொடுத்தவர் ஆண்ட்ரியா தான்.
இரண்டாவது முறையாக சன்னி லியோனுக்கு குரல் கொடுக்கிறார் ஆண்ட்ரியா.
Comments


Click it and Unblock the Notifications