»   »  வித்தியாசமான கெட்டப்பில் சன்னி லியோன் - புகைப்படம் வெளியானது!

வித்தியாசமான கெட்டப்பில் சன்னி லியோன் - புகைப்படம் வெளியானது!

Posted By:
Subscribe to Oneindia Tamil
வித்தியாசமான கெட்டப்பில் சன்னி லியோன்-புகைப்படம்- வீடியோ

மும்பை : கவர்ச்சி நடிகைகளில் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவர் நடிகை சன்னி லியோன். இவர் நிறைய பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். தற்போதுதான் தென்னிந்திய சினிமாவில் நிறைய படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.

கவர்ச்சி நடிகையாகக் கொடிகட்டிப் பறந்த சன்னி லியோனுக்கு இப்போது தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. சன்னி நடித்த 'டெரா இன்டெஸார்' படம் ரிலீஸுக்கு காத்திருக்கிறது.

 Sunny leone new getup photo released

இந்நிலையில், தற்போது ஒரு புதிய படத்திற்காக ஆணாக நடித்திருக்கிறார் சன்னி லியோன். அதற்காக மேக்கப் போட்டு ஒரு புகைப்படத்தை எடுத்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அவரது ரசிகர்கள் இந்தப் புகைப்படத்தை வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

இந்தப் புகைப்படத்தைப் பதிவிட்டிருக்கும் சன்னி லியோன், 'மேக்கப் போட்டபிறகு நான் எனது சகோதரனைப் போலவும், தந்தையைப் போலவும் இருக்கிறேன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

English summary
Famous actress Sunny Leone has acted in a number of Bollywood films. Sunny Leone is currently playing a men role for a new film. Sunny leone shred her photo on twitter.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil