Sunny Leone in Cannes 2023 - கேன்ஸ் 2023.. அசத்தல் உடையில் சன்னி லியோன்
கேன்ஸ்: Sunny Leone in Cannes 2023 (கேன்ஸ் திரைப்பட விழாவில் சன்னி லியோன்) கேன்ஸ் திரைப்பட விழாவில் நடிகை சன்னி லியோன் அசத்தல் உடையில் கலந்துகொண்டார். அதுதொடர்பான புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரத்தில் வருடந்தோரும் கேன்ஸ் திரைப்பட விழா நடைபெறும். 1946ஆம் ஆண்டிலிருந்து நடக்கும் இந்த விழா சினிமா துறையில் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவுக்கு அடுத்து பெரிய விழாவாக கருதப்படுகிறது. அந்த வகையில் 76ஆவது கேன்ஸ் திரைப்பட விழா கடந்த 17ஆம் தேதி தொடங்கியது. 27ஆம் தேதிவரை கோலாகலமாக நடக்கும் இந்த விழாவில் சர்வதேச திரைப்பட நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் கலந்துகொள்வார்கள்.

சிவப்பு கம்பள வரவேற்பு: கேன்ஸ் விழாவில் மற்றொரு சிறப்பு சிவப்பு கம்பள வரவேற்பு. அதில் நடப்பதை பலரும் தங்களது வாழ்நாள் கௌரவமாக கருதுகின்றனர். அதன்படி இந்தியாவிலிருந்து மத்திய இணையமைச்சர் எல்.முருகன், The Elephant whisperers ஆவண படத்தின் தயாரிப்பாளர் குனீத் மோங்கியா, முன்னாள் உலக அழகி மனுஷி சில்லார் நடிகைகள் சாரா அலிகான், இஷா குப்தா, மிருணால் தாக்கூர், அனுஷ்கா ஷர்மா, ஏமி ஜாக்சன் உள்ளிட்டோர் சிவப்பு கம்பள வரவேற்பை பெற்றனர்.
தமிழ்நாட்டிலிருந்து சென்ற பிரபலங்கள்: அதேபோல் நடிகையும், பாஜகவை சேர்ந்தவருமான குஷ்பூ இந்திய பிரதிநிதியாக இவ்விழாவில் கலந்துகொண்டார். இயக்குநர் விக்னேஷ் சிவனும் இவ்விழாவில் கலந்துகொண்டு ஸ்பைடர் மேன் நடிகருடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி இணையத்தில் ட்ரெண்டானது. விக்னேஷ் சிவன் கலந்துகொண்டதால் நயந்தாராவும் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கபப்ட்ட சூழலில் அவர் கலந்துகொள்ளவில்லை.

ட்ரோல்களை சந்தித்த ஐஸ்வர்யா ராய்: இதனையடுத்து வருடம் தவறாமல் கேன்ஸ் விழாவில் கலந்துகொள்ளும் ஐஸ்வர்யா ராய் இந்த முறையும் வித்தியாசமான உடை அணிந்து கலந்துகொண்டார். அவரது உடையை பார்த்த ரசிகர்கள் கடுமையாக ட்ரோல் செய்யவும் ஆரம்பித்தனர். நடிகை நந்திதா தாஸ்கூட, கேன்ஸ் விழா என்பது திரைப்படங்களுக்கானது உடைகளுக்கானது அல்ல என ஓபனாக பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
சன்னி லியோன் என்ட்ரி: இந்நிலையில் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் நடிகை சன்னி லியோன் கலந்துகொண்டு ரெட் கார்ப்பெட்டில் வலம் வந்தார். இது அவர் கலந்துகொள்ளும் முதல் கேன்ஸ் திரைப்பட விழா என்பது குறிப்பிடத்தக்கது. இடது கையில் முழு ஸ்லீவ்வோடு பச்சை நிற கவுனில் தோன்றிய அவரை அங்கிருந்தவர்கள் வெகுவாகவே ரசித்தனர். சன்னிக்கான மேக்கப்பை வான்சாட்டோ கவனிக்க, அவர் அணிந்திருந்த உடையை மரியா கோக்கியா வடிவமைத்திருந்தார். கேன்ஸில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சன்னி லியோன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்திருக்கிறார்.

அனுராக் காஷ்யப்பின் கென்னடி: சன்னி லியோன் அனுராக் காஷ்யப் இயக்கத்தில் கென்னடி என்ற படத்தில் நடித்திருக்கிறார். ராகுல் பட் ஹீரோவாக நடித்திருக்கிறார். இவர்கள் தவிர இயக்குநர் அனுராக் காஷ்யப்பும் அந்தப் படத்தில் முக்கியமான ரோலில் நடித்திருக்கிறார். கென்னடி திரைப்படமானது கேன்ஸ் திரைப்பட விழாவில் மிட் நைட் ஸ்க்ரீனிங்கில் திரையிடப்படுவது குறிப்பிடத்தக்கது. படம் விரைவில் இந்தியாவில் வெளியாகவுள்ளது.


Click it and Unblock the Notifications











