இங்க பார்யா.. 'நான் அந்த கல்லூரி மாணவனின் அம்மாவா?' நடிகை சன்னி லியோன் கிளுக் ரிப்ளை!
மும்பை: கல்லூரி மாணவன் ஹால் டிக்கெட்டில் அம்மா என நடிகை சன்னி லியோன் பெயர் இடம்பெற்றிருப்பதற்கு அவர் பதில் அளித்துள்ளார்.
Recommended Video
பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன். பல படங்களில் ஒரு பாடலுக்கு ஆடியுள்ள அவர், கொரோனா காலகட்டத்தில் அமெரிக்காவில் இருந்தார்.
இப்போது இந்தியா திரும்பியுள்ள அவர், கன்னடத்தில் சுதீப் நடிக்கும் படம் ஒன்றில் ஒரு பாடலுக்கு ஆட இருக்கிறார்.

குழப்ப டிக்கெட்
இந்நிலையில், பீகாரில், முசாஃபர்பூர் பகுதியில் இளங்கலை இரண்டாமாண்டு படிக்கும் மாணவன் குந்தன் குமாரின் ஹால் டிக்கெட்டில் ஏற்பட்ட குழப்பம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த மாணவனின் ஹால் டிக்கெட்டில் அவரது தந்தை, பாலிவுட் நடிகர் இம்ரான் ஹாஸ்மி என்றும், தாய் நடிகை சன்னி லியோன் என்றும் அச்சிடப்பட்டிருந்தது.

சதுர்புஜ் ஸ்தான்
முகவரியாக, பாலியல் தொழிலுக்கு பெயர்பெற்ற இடமான சதுர்புஜ் ஸ்தான் (Chaturbhuj Sthan) எனக் குறிப்பிடப்பட்டிருந்து. இந்த ஹால் டிக்கெட் சமூக வலைதளங்களில் வைரலானது. இதை வைத்து மாநில அரசுக்கு எதிராகவும் பலர் போர்க்கொடி தூக்கினர்.

மாணவன் குசும்பு
பின்னர் இந்த ஹால் டிக்கெட், பல்கலைக்கழக பேராசிரியர்களிடம் காண்பிக்கப்பட்டது. பல்கலைக்கழக பதிவாளர் ராம் கிருஷ்ண தாகூர் கூறும்போது, 'தவறு எங்கு நடந்திருக்கிறது என்பதை அறிய விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளோம். ஹால் டிக்கெட்டில் இடம்பெற்றுள்ள தவறுக்கு மாணவனின் குசும்பு காரணமாக இருக்கலாம்.

என் மகன் இல்லை
முழுமையான விசாரணைக்கு பிறகே அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதற்கிடையே மாணவனின் அந்த ஹால் டிக்கெட் விவகாரத்துக்கு பதிலளித்துள்ள பிரபல இந்தி நடிகர் இம்ரான் ஹாஸ்மி, 'சத்தியமாக அவர் என் மகன் இல்லை' என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே இப்போது நடிகை சன்னி லியோனும் இதற்கு பதிலளித்துள்ளார்.

ஹா ஹா ஹா ஹா
'இந்த மாணவர்கள் சிறப்பானவர்களாக இருக்கிறார்கள். பெரிய கனவு காண்பதற்கான வழி, ஹா ஹா ஹா ஹா' என கூறியுள்ளார். கடந்த ஆண்டு பீகாரில் வெளியிடப்பட்ட இளநிலை பொறியாளர் முதல்நிலை தேர்வு முடிவிலும், சன்னி லியோன் 98.5 விழுக்காடு மதிப்பெண்கள் எடுத்து முதல் இடத்தில் இருப்பதாக பட்டியல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


Click it and Unblock the Notifications











