சன்னிக்கு வந்த நேரத்தை பார்த்தீங்களா, பாகுபலி அனுஷ்காவை விட...
மும்பை: இளவரசியாக நடிக்கும் படத்திற்கு சன்னி லியோன் அதிக சம்பளம் கேட்டுள்ளார்.
போரில் வீர தீர செயல்கள் செய்த இளவரசி ஒருவரின் கதை தெலுங்கில் படமாக்கப்படுகிறது. இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் இளவரசியாக நடிக்க சன்னி லியோனை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
வடிவுடையான் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் துவங்குகிறது.

சம்பளம்
இளவரசியாக நடிக்க சன்னி லியோன் ரூ. 3.5 கோடி சம்பளம் கேட்டாராம். ரூ.3.5 கோடி அதிகம் என்றாலும் சன்னிக்கு இருக்கும் மவுசு மற்றும் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய 4 மொழிகளில் ரிலீஸாவதை மனதில் வைத்து அவர் கேட்டதை கொடுக்க சம்மதித்துள்ளார்களாம்.

பாகுபலி
பாகுபலி, பாகுபலி 2 படங்களில் நடிக்க அனுஷ்காவே ரூ. 2.5 கோடி தான்(ஒரு படத்திற்கு) வாங்கினார். அவரை விட அதிகம் சம்பளம் வாங்குகிறார் சன்னி லியோன். மார்க்கெட் உள்ளபோதே சம்பாதித்துக் கொள்கிறார் சன்னி.

ரசிகர்கள்
சன்னி லியோனுக்கு தென்னிந்தியாவில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளார்கள். அதனால் இந்த படத்தில் போடும் பணத்தை எளிதில் எடுத்துவிடலாம் என்று தயாரிப்பாளர்கள் நம்புகிறார்கள்.

கர்நாடகா
கேரளா சென்ற சன்னிக்கு சேட்டன்கள் அமோக வரவேற்பு அளித்தனர். இந்நிலையில் புத்தாண்டையொட்டி பெங்களூரில் நடக்கவிருந்த சன்னி லியோன் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. கன்னட அமைப்புகளின் எதிர்ப்பை அடுத்து நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











