Don't Miss!
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சன்னி லியோனைப் பார்த்திருப்பீங்க.. கரஞ்சித் கவுரைப் பார்த்திருக்கீங்களா.. !
சன்னிலியோனின் வாழ்க்கை வரலாற்று வெப் சீரீஸ் ட்ரெயிலரை அவர் வெளியிட்டுள்ளார்.
மும்பை: நடிகை சன்னி லியோன் நடிக்கும் தன்னுடைய வாழ்க்கை வரலாற்றுத் தொடரான தரஞ்சித் கவூர் ட்ரெயிலைரை வெளியிட்டுள்ளார்.
கனடாவில் பிறந்து போர்னோ பட நடிகையாக திரை வாழ்க்கையை ஆரம்பித்து, தற்போது பாலிவுட் சினிமாவை கலக்கி வருபவர் நடிகை சன்னி லியோன். வேற்றுலக வாசிகளுக்குக்கூட சன்னிலியோனைத் தெரியும் என்று சொல்லுமளவுக்கு அவரின் புகழ் உச்சம் தொட்டுள்ளது.
மூன்று குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வரும் சன்னி லியோன், பல்வேறு சமூக சேவை சார்ந்த விஷயங்களிலும் நாட்டம் காட்டும் நடிகை. அவரின் திரைவாழ்க்கைக்குப் பின்னால் இருக்கும் திரைமறைவு வாழ்க்கை ரகசியம் என்னவென்று தெரிந்துகொள்ள யாருக்குத்தான் ஆசை இருக்காது?
கனடாவில் ஒரு நடுத்தர வர்க்க சீக்கிய குடும்பத்தில் பிறந்த சன்னி லியோனின் இயற்பெயர்தான் கரஞ்சித் கவுர். இவரது வாழ்க்கை தற்போது வெப் சீரிஸாக மலர்ந்துள்ளது. இதில் சன்னி லியோனாக அவரே நடித்துள்ளார். சீ5 நிறுவனம் தயாரிக்கும் "கரஞ்சித் கவுர்" வெப் சீரீஸில் சன்னி லியோனின் பால்ய வயது கதாபாத்திரமாக "டோபரா" என்ற இந்தி படத்தில் நடித்த 14 வயது ரைசா சௌஜானி நடிக்கிறார்.
முதல் பாகம் ஜூலை 16ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் ட்ரெயிலரை வெளியிட்டுள்ள சன்னி லியோன், "நீங்கள் சன்னி லியோனை பார்த்துள்ளீர்கள்... இது கரஞ்சித் கவுரை சந்திப்பதற்கான நேரம் என ட்வீட் செய்துள்ளார்.
You have seen Sunny Leone... Now it's time to meet #KarenjitKaur
— Sunny Leone (@SunnyLeone) July 6, 2018
Check out the trailer here: https://t.co/lBO82OQdyS@ZEE5India @namahpictures @freshlimefilms @ADITYADATT
"எந்த ஒரு இந்தியப் பெண்ணும் இப்படி இருக்க மாட்டள்" என்று தொகுப்பாளர் சன்னிலியோனை அறிமுகம் செய்கிறார். அதன்பிறகு சன்னிலியோன் பள்ளி நாட்களிலிருந்து போர்னோ படங்களுக்கு நடிக்க ஆரம்பித்து பிறகு மெல்ல... மெல்ல... பாலிவுட் சினிமாவுக்குள் நுழைந்த காட்சிகள் காட்டப்படுகின்றன.
சன்னி லியோனின் பள்ளிப்பருவ நாட்கள் மிகவும் வலி மிகுந்ததாகவும், அதுபோன்ற சவாலான கதாபாத்திரத்தில் நடிக்க தனக்கு விருப்பம் அதிகம் என்றும், அவருடன் அடிக்கடி ஸ்கைப்பில் உரையாடி ஆலோசனை பெற்றதாகவும் நடிகை ரைசா தெரிவித்துள்ளார்.