மொழி புரியாவிட்டாலும்.. பேரரசுக்கு பேட்ட ராப் மேடையிலேயே பதில் சொன்ன சன்னி லியோன்
சென்னை: நடிகை சன்னி லியோன் உலக அளவில் பிரபலமான நடிகையாக இருப்பவர். பஞ்சாபி தம்பதிக்கு கனடாவில் பிறந்த அவர் ஆபாச நடிகையாக முதலில் அறியப்பட்டார். பிறகு அதிலிருந்து ஒதுங்கி சராசரியான படங்களில் நடிக்க ஆரம்பித்தார். தமிழிலும் சில படங்களில் நடித்திருக்கும் அவர்; இப்போது பிரபுதேவாவுடன் பேட்ட ராப் படத்தில் நடித்திருக்கிறார். இந்தச் சூழலில் பேட்ட ராப் பட விழாவில் அவர் பேசியிருப்பது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
கனடாவில் பிறந்தவர் சன்னி லியோன். ஜெர்மன் பேக்கரியில் வேலை பார்த்துவந்த அவருக்கு ஆபாச படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் அவர் நடித்ததால் உலகம் முழுவதும் ஃபேமஸ் ஆனார். அதேசமயம் அவர் மீது பலரும் வேறு விதமான பார்வைகளையே வைத்திருந்தனர். ஒருகட்டத்தில் ஆபாச திரைப்பட உலகில் இருந்து ஒதுங்கிய சன்னி லியோன் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அவர் திரைப்படங்களில் நடிக்க வந்தபோதும் அவர் மீது விமர்சனத்தையே முன்வைத்தனர்.

கலங்காத சன்னி: இருந்தாலும் சன்னி லியோன் அதனை பார்த்து கலங்கவில்லை. 2011ஆம் ஆண்டு ஹிந்தி பிக்பாஸில் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியிலிருந்து அவர் மீது வைக்கப்பட்டிருந்த வேறு விதமான பார்வை கொஞ்சம் கொஞ்சமாக மாற தொடங்கியது. பிக்பாஸிலிருந்து வெளியே வந்த பிறகு ஜிஸ்ம் 2வில் நடித்தார். அதிலும் கவர்ச்சி கதாபாத்திரமே ஏற்றிருந்தார். மேலும் அந்தப் படத்துக்கு ஏராளமான ஹிந்தி பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தன. அதனையும் சரியாக பயன்படுத்திக்கொண்டார் அவர்.
வரிசையான படங்கள்: முதல் படத்தில் நடித்து முடித்த பிறகு அவருக்கு ஜாக்பாட், ஷூட் அவுட் அட் வதாலா, ராகினி எம்.எம்.எஸ் 2, ஹேட் ஸ்டோரி, ஏக் பஹேலி லீலா, குச் குச் லோச்சா ஹை, ஒன் நைட் ஸ்டாண்ட் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தார். ஒவ்வொரு படத்திலும் அவர் நடிக்க நடிக்க அவர் மீது இருந்த ஆபாச நடிகை என்ற முத்திரை முற்றிலுமாக விலக தொடங்கியது.
மற்ற மொழிகளில் சன்னி லியோன்: ஹிந்தி மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, கன்னடத்திலும் அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தன. அதன்படி தமிழில் முதன்முறையாக, வடகறி திரைப்படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடினார். அவர் நடனம் ஆடுகிறார் என்பதே அந்தப் படத்துக்கு பெரிய விளம்பரமாக இருந்தது. அந்தப் படத்துக்கு பிறகு ஓ மை கோஸ்ட், தீ இவன் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
பேட்ட ராப்: சூழல் இப்படி இருக்க இப்போது அவர் பேட்ட ராப் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இதில் பிரபுதேவா ஹீரோவாக நடிக்கிறார். மேலும் வேதிகா, விவேக் பிரசன்னா உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் விழா நேற்று சென்னையில் நடந்தது. அதில் படக்குழுவினர் கலந்துகொண்டனர். அதுமட்டுமின்றி இயக்குநர் பேரரசும் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். விழாவில் பேசிய பேரரசு, ’முன்பெல்லாம் இந்தி தெரியாது போடா என்று சொல்வார்கள். சந்தோஷமாக இருந்தது.
சன்னி லியோன் பதில்: அதேபோல் இந்தி தெரியாது போடா என்கிற டி ஷர்ட்டை போட்டதை பார்க்கும்போதும் சந்தோஷமாகத்தான் இருந்தது. ஆனால் இப்போ கவலையாக இருக்கிறது. ஏனெனில் பக்கத்தில் சன்னி லியோன் அமர்ந்திருக்கிறர். அவருடன் இரண்டு வார்த்தைகள்கூட பேச முடியவில்லை. இதுக்காகவே ஹிந்தி கற்றுக்கொள்ள வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து பேச வந்த சன்னி லியோன், 'எனக்கு மொழி புரியாவிட்டாலும் உங்களது அன்பு புரிகிறது' என்று சிம்ப்பிளாக முடித்துக்கொண்டார். அவரது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











