தாய்லாந்து டூர்... பட்டாயா வாக்கிங் ஸ்ட்ரீட்டில் சன்னி லியோன் ஜாலி ரவுண்ட்... ஒரு பய பார்க்கலையே!
மும்பை: நடிகை சன்னி லியோன், தாய்லாந்துக்கு சுற்றுலா சென்ற புகைப்படம் வைரலாகி வருகிறது.
பாலியல் படங்களில் நடித்து வந்த சன்னி லியோன், இப்போது பாலிவுட் நாயகி. இவர் 2012 ஆம் ஆண்டு பூஜா பட் இயக்கிய ஜிஸ்ம் 2 என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.
தொடர்ந்து ஜாக்பாட், ராகினி எம்.எம்.எஸ் 2, ஹேட் ஸ்டோரி 2 உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

வடகறி
மலையாளத்தில் ரங்கீலா, மதுரராஜா ஆகிய படங்களிலும் நடித்தார். தமிழில் ஜெய், ஸ்வாதி நடித்த வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார். அடுத்து வீரமாதேவி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

ரசிகர்கள்
தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து சன்னி லியோனுக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். சன்னி லியோனுக்கு நிஷா வெபர் கவுர், நோவா சிங் வெபர், அஷர் சிங் வெபர் என மூன்று குழந்தைகள்.
போட்டோஸ்
படங்கள், பாடல்களை தாண்டி சன்னி லியோன், சமூக வலைதளங்களில் வெளியிடும் ஹாட் போட்டோக்களால் எப்போதும் பரபரப்பாகவே இருந்து வருகிறார். இப்போது அவர் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

பட்டாயா
தனது கணவர் டேனியல் வெபர் மற்றும் நண்பர்களுடன் அங்கு சென்றுள்ள, சன்னிலியோன் பட்டாயா கடற்கரை ஏரியாவில் ஜாலியாக சென்றுள்ளார். அங்குள்ள வாக்கிங் ஸ்ட்ரீட் பிரபலமான ஏரியா. அங்கும் கணவருடன் ஜாலியாக ரவுண்ட் அடித்துள்ளார். ஆனால், அவர் சன்னி லியோன் என்பது யாருக்கும் தெரியவில்லை என்பதுதான் சோகம்.

சின்னதோ, பெரியதோ
இதையடுத்து பாங்காக்கில் உள்ள சில புத்தர் கோயிலுக்கு சென்ற சன்னிலியோன், அந்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அதில், தாய்லாந்தை நான் நேசிக்க பல காரணங்கள் இருந்தாலும் முக்கியமான காரணம், சின்னதோ, பெரியதோ கோயில்கள்தான். என் கணவருடன் அங்கு சென்று நான் வழிபட்டேன் என்று தெரிவித்துள்ளார். இந்த புகைப்படங்களை ஏராளமானோர் லைக் செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











