சாப்பாட்ட வாயில வைக்க முடியல.. வாய் ஒன்னு சொல்ல.. கை ஒன்ன காட்ட.. சன்னி வீட்ல ஒரே ஜாலிதான் போங்க!

சென்னை: பிரபல நடிகை எப்போதும் தூங்கிக் கொண்டிருப்பதாகவும் அவர் சமைப்பதை வாயிலேயே வைக்க முடியவில்லை என்றும் அவரது கணவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Recommended Video

Kaadan Release date | Alia Bhatt Ranbir Kiss | Sunny Leone Bored Tweet | Julie Tik Tok

கொரோனா அச்சுறுத்தலால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. வரும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டிருந்தாலும், கொரோனா தாக்கம் குறைவாக உள்ள சில மாநிலங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

இருப்பினும் மக்கள் அத்தியாவசிய தேவையை தவிர வெளியே வரக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் நடிகைகள் பலரும் தங்களின் வீடுகளில் இருந்தப்படியே போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

சன்னி ஷேரிங் வீடியோ

சன்னி ஷேரிங் வீடியோ

அந்த வகையில் லாக்டவுனின் முதல்நாள் முதல் தற்போது வரை நடிகை சன்னி லியோன் பல்வேறு கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை பிஸியாக வைத்துள்ளார். இந்நிலையில் நடிகை சன்னி லியோன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது கணவர் டேனியர் வீடியோ ஒன்றை ஷேர் செய்திருக்கிறார்.

மிரள வைக்கும் கார்ட்ஸ்

மிரள வைக்கும் கார்ட்ஸ்

அதில் மேலே சட்டை இல்லாமல் நிற்கும் சன்னி லியோனின் கணவர் டேனியல், தனது மனைவியை வாயார புகழ்ந்து தள்ளியிருக்கிறார். சன்னி லியோனின் மேனேஜராகவும் உள்ள டேனியல், அவரது சமையலை பாராட்டியிருக்கிறார். வாயால் பாராட்டு பத்திரம் வாசிக்கும் டேனியல் கையில் காட்டும் பிளேகார்ட்ஸ்கள் மிரள விட்டுள்ளது.

வாயில வைக்க முடியல

வாயில வைக்க முடியல

அதில் எனக்கு உதவுங்கள்.. என்னை பைத்தியம் ஆக்குகிறார்.. அவர் எல்லா நாட்களும் தூங்கிக்கொண்டே இருக்கிறார்.. அவர் சமைப்பதை வாயிலேயே வைக்க முடியவில்லை.. அவர் பெரிய சோம்பேறி.. அவர் எப்போதும் பைஜாமாதான் போட்டு கொண்டிருக்கிறார். அவர் எல்லா நாட்களும் செல்ப எடுக்கிறார் என வரிசையாக எழுதப்பட்ட பேப்பரை காட்டுகிறார் டேனியல்.

வீட்டில் பர்ஃபெக்ட்

வீட்டில் பர்ஃபெக்ட்

ஆனால் டேனியல் பேசும்போது சன்னி லியோன் வீட்டில் பர்ஃபெக்ட்டாக இருக்கிறார் என்றும் தனக்கு பல உதவிகளை செய்து வருகிறார் என்றும் கூறியிருக்கிறார். சன்னி லியோனின் சமையலை புகழ்ந்து தள்ளியிருக்கிறார் டேனியல். சமையல் துணி துவைப்பது என எல்லா வேலைகளையும் சன்னி லியோனே செய்வதாகவும் கூறியிருக்கிறார் டேனியல்.

ஹலோ சொன்ன சன்னி

ஹலோ சொன்ன சன்னி

டேனியல் பேசுவதற்கும் அவர் காட்டும் பிளே கார்ட்ஸுக்கும் கொஞ்சமும் சம்பந்தம் இல்லை. டேனியல் பேசிக் கொண்டிருக்கும் போதே அவரது பின்னால் கடந்து போகும் சன்னி, டர்ன் ஆகி வந்து கேகமராவுக்கு ஹலோ சொல்கிறார். அதில் ரொம்பவே நீட்டாகவும் அழகாவும் உடையணிந்திருக்கிறார் சன்னி.

பழிக்குப்பழி..

பழிக்குப்பழி..

இந்த வீடியோவை ஷேர் செய்திருக்கும் சன்னி லியோன், அதில் ஹ்ம்ம்ம்.. இதை சும்மா பாருங்கள்.. டேனியல் எல்லா நாளும் என்ன செய்கிறார் என்பதை நாளைக்கு நான் காட்டுகிறேன். பழிக்கு பழி .. இட்ஸ் ஆன்! என கேப்ஷன் கொடுத்துள்ளார் சன்னி லியோன். இந்த வீடியோவின் மூலம் சன்னி லியோன் கும்பத்தினருடன் ஜாலியாக நேரத்தை செலவழிக்கிறார் என்பது மட்டும் தெளிவாகியிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X