சன்னி லியோன் கவர்ச்சிப் பாட்டு பெரிய அளவில் பேசப்படும்! - தயாநிதியின் 'அஃபிஷியல்' அறிவிப்பு

By Shankar

சென்னை: பிரபல சர்வதேச ஆபாசப் பட நாயகி, பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் வடகறி படத்தில் கவர்ச்சி நடனமாடுவதை, பிரஸ் ரிலீஸ் அனுப்பி உறுதி செய்துள்ளார் தயாநிதி அழகிரி.

இந்தப் பாடல் பெரிதாகப் பேசப்படும் என அதில் அவர் தெரிவித்துள்ளார்.

தயாநிதி அழகிரியின் மற்றொரு தயாரிப்பு நிறுவனமான மீகா என்டர்டெயின்மென்ட் வழங்கும் புதிய படம் வடகறி

முதல் முறையாக

முதல் முறையாக

இந்தப் படத்தை சரவணராஜன் இயக்குகிறார். படத்தில் அதிரடியாக ஏதாவது ஒரு விஷயத்தைச் செய்ய வேண்டும் என யோசித்தபோதுதான், பாலிவுட்டை கலக்கி வரும் ஆபாசப்பட நாயகி சன்னி லியோனை நடனமாட வைக்கும் யோசனை வந்ததாம். சன்னி லியோன் நடிக்கும் முதல் தமிழ்ப் படம் இது.

யுவன் இசை

யுவன் இசை

இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். யுவனின் பாடலுக்கு படத்தில் சன்னி லியோனும் ஜெய்யும் இணைந்து ஆட்டம் போடுகிறார்கள். கல்யாண் ஒளிப்பதிவு செய்கிறார்.

பிரமாண்டமாய்

பிரமாண்டமாய்

இந்தப் பாடலை மிகப் பிரமாண்டமாய் படமாக்க திட்டமிட்டுள்ளனர். தமிழ் சினிமாவில் ஒரு பாடலுக்கு மட்டுமே இந்த அளவு பிரமாண்டமாய் செலவழித்து படமாக்கம் செய்வது இதுவே முதல் முறை.

ஒத்திகை

ஒத்திகை

இந்தப் பாடலுக்காக இப்போது ஒத்திகை செய்து வருகிறார்களாம். "படமாக்கத்துக்கு முந்தைய முன் தயாரிப்பு பணிகளில் தீவிரமாக உள்ளோம். நிச்சயம் இந்தப் பாடல் பெரிய அளவில் பேசப்படும் என்பது இப்போதே தெரிகிறது," என இது குறித்த பத்திரிகைச் செய்தியில் குறிப்பிட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X