twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆஹா...இது என்ன புதுக்கதையா இருக்கு... சன்னி லியோன் எப்படா சேச்சியானாங்க? ரசிகர்கள் கலாயில் நடிகை!

    By
    |

    சென்னை: நடிகை சன்னி லியோன் பளிச்சென்று வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது.

    பாலியல் படங்களில் நடித்து வந்த நடிகை சன்னி லியோன், இப்போது பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.

    2012 ஆம் ஆண்டு பூஜா பட் இயக்கிய ஜிஸ்ம் 2 என்ற படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமான இவர், தொடர்ந்து ஜாக்பாட், ராகினி எம்.எம்.எஸ் 2, ஹேட் ஸ்டோரி 2 உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

    ரசிகர்கள்

    மலையாளத்தில் ரங்கீலா, மதுரராஜா படங்களில் நடித்த இவர், தமிழில் ஜெய், ஸ்வாதி நடித்த வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார். அடுத்து தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்த சன்னி லியோனுக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள். படங்கள், பாடல்களை தாண்டி சன்னி லியோன், சமூக வலைதளங்களில் வெளியிடும் போட்டோக்களால் பரபரப்பாகவே இருந்து வருகிறார்.

    குழந்தைகள்

    குழந்தைகள்

    இவரது கணவர் டேனியல் வெபர். நிஷா என்ற பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்க்கும் சன்னி, வாடகைத்தாய் மூலம் பெற்ற ஆசேர் மற்றும் நோவா சிங் என்ற குழந்தைகளையும் வளர்த்து வருகிறார். இந்நிலையில் இவர், நான் செய்யும் பல விஷயங்கள் சமூக வழக்கத்துக்கு எதிரானவைதான் என்று சமீபத்தில் தெரிவித்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

    வண்ணங்களால்

    வண்ணங்களால்

    இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய போட்டோவை வெளியிட்டிருக்கிறார், சன்னி லியோன். பளிச்சென்று பலவித வண்ணங்களால் நிறைந்திருக்கும் அந்தப் புகைப்படம் பார்த்த உடனேயே பச்சக்கென்று ஒட்டிக்கொள்கிறது. அதற்கு வண்ணங்களின் குழப்பம் என்று கேப்ஷன் கொடுத்திருக்கிறார். இந்த போட்டோ செம என்று வர்ணித்துள்ள ரசிகர்கள் அதற்கு கமென்ட்களையும் குவித்துள்ளனர்.

    எப்படா சேச்சியானாங்க?

    எப்படா சேச்சியானாங்க?

    'உங்க டிசைனர் யாருங்க? அருமையா பண்ணியிருக்காரே... அப்படியே அட்ரஸை சொல்லுங்களேன், நானும் ரெண்டு மூனு ஆர்டர் பண்ணணும் என்று சிலர் கூறியுள்ளனர். சில மலையாள ரசிகர்கள், அவரை சேச்சி என்று அழைத்துள்ளனர். அதற்கு சிலர், இதென்ன புதுக்கதையா இருக்கு...அவங்க எப்படா சேச்சியானாங்க?' என்று கேட்டுள்ளனர்.

    இளமையா மாறுங்க

    இளமையா மாறுங்க

    வண்ணங்களுக்கும் சன்னிக்கும் பெரிய வித்தியாசம் தெரியலை. ஏன்னா, ரெண்டும் ஒன்னுபோலதான் இருக்கு' என்று வர்ணித்துள்ளார். ஒரு ரசிகர், வர வர வயசான மாதிரியே தெரியறீங்களே... ஏதாவது பண்ணி இளமையா மாறுங்க' என்று கலாய்த்துள்ளனர். சில தமிழ் ரசிகர்கள், தலைவி லெவலே வேறதான் என்று கூறியுள்ளனர். சன்னி லியோனின் இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

    English summary
    Actress Sunny Leone's new instagram still storms internet
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X