இந்த ராட்சசனை இப்போ தான் வீட்டுக்கு கொண்டு வந்தேன்.. சன்னி லியோனின் மிரட்டும் புது Maserati!
மும்பை: பிரபல பாலிவுட் கவர்ச்சி கன்னி நடிகை சன்னி லியோன் புதிதாக வாங்கி உள்ள சொகுசு காருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு வைரலாக்கி உள்ளார்.
கொரோனா லாக்டவுனில் மும்பையில் இருந்து அமெரிக்காவிற்கு குடும்பத்துடன் பறந்த நடிகை சன்னி லியோன், அங்கேயே வசித்து வருகிறார்.
விலை உயர்ந்த சொகுசு காரான Maserati உடன் அவர் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை வாய் பிளக்க வைத்திருக்கிறது.

ராட்சசன்
கணவர் டேனியல் வெப்பர் மற்றும் குழந்தைகளுடன் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் தற்போது வாழ்ந்து வரும் நடிகை சன்னி லியோன், அவ்வப்போது சுற்றுலாவும் சென்று வருகிறார். இந்நிலையில், தற்போது இந்த பீஸ்ட்டை நேற்று தான் வாங்கினேன் என அவர் வெள்ளை நிற Maserati காருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சர்யப்பட வைத்துள்ளார்.

ரொம்ப ஹேப்பியா இருக்கும்
வெள்ளை நிற பிரம்மாண்ட சொகுசு காருக்கு அருகே வெள்ளை நிற டாப்ஸ் மற்றும் டிராக் பேன்ட் அணிந்து கொண்டு நடிகை சன்னி லியோன் செம செக்ஸியாக போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை பதிவிட்டு, அதற்கு கேப்ஷனாக எப்போதெல்லாம் இந்த காரை ஓட்டிச் செல்கிறேனோ, அப்போதெல்லாம் ரொம்ப ஹேப்பியா ஃபீல் பண்றேன் எனவும் பதிவிட்டுள்ளார்.

ஒரு மில்லியன் லைக்ஸ்
தனது ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் இந்த புகைப்படத்தை பதிவிட்டு உள்ள நடிகை சன்னி லியோன் அதை வேற லெவலில் வைரலாக்கி வருகிறார். வெள்ளை நிற சொகுசு காரை பார்த்து வாய் பிளந்த ரசிகர்கள் ஒரு மில்லியன் லைக்குகளை அள்ளி குவித்து வருகின்றனர். மேலும், புதுசா கார் வாங்கி உள்ள நடிகை சன்னி லியோனை வாழ்த்தியும் வருகின்றனர்.

காருக்குள் கணவர்
இந்த வெள்ளை நிற Maserati காரின் விலை சுமார் 1.5 கோடி முதல் 2.5 கோடி ரூபாய் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. புது காரை கணவர் டேனியல் வெப்பருடன் சென்று வாங்கிய நடிகை சன்னி லியோன். அவருடன் காருக்குள் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படத்தை பதிவிட்டு, லவ் என கேப்ஷன் கொடுத்தும் வைரலாக்கி வருகிறார்.

காலேஜ் சீட்
சமீபத்தில் கொல்கத்தாவில் உள்ள பிரபல தனியார் கல்லூரி ஒன்றின் சேர்க்கைப் பட்டியலில் நடிகை சன்னி லியோன் பெயர் முதலிடத்தில் இருந்தது சர்ச்சையை கிளப்பியது. அதற்கு செம கிண்டலாக, அடுத்த ஆண்டு, நானும் உங்களுடன் கல்லூரியில் படிக்க வருகிறேன் என சன்னி லியோன் கொடுத்த ரிப்ளையும் ரசிகர்களால் ரசிக்கப்பட்டது.

நீச்சல் உடையில்
புதிய படங்கள் ஏதும் நடிக்காமல், ரசிகர்களை ஏமாற்றி வரும் நடிகை சன்னி லியோன், தனது அதிகளவு நேரத்தை குடும்பத்தினருடன் செலவிட்டு வருகிறார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னதாக கருப்பு நிற பிகினி அணிந்து கொண்டு, நீச்சல் குளம் அருகே அவர் பதிவிட்ட ஹாட் போட்டோ ரசிகர்களுக்கு மீண்டும் தலைவியின் தரிசனம் கொடுத்த திருப்தியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











