விமான விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த சன்னி லியோன்
மும்பை: நடிகை சன்னி லியோன் விமான விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்.
பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வரும் சன்னி லியோன் தனது கணவர் டேனியல் வெபருடன் மும்பையில் வசித்து வருகிறார். சன்னி தனது கணவர் மற்றும் குழுவுடன் தனி விமானத்தில் மகாராஷ்டிராவில் பயணம் செய்துள்ளார்.
அப்பொழுது மோசமான வானிலை காரணமாக விமானம் விபத்துக்குள்ளாகப் பார்த்தது. விமானிகளின் சாதுர்யத்தால் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் சன்னி அதிர்ஷ்டவசமான உயிர் பிழைத்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
கடவுளே
நாங்கள் எல்லாம் உயிர் பிழைத்துள்ளோம், கடவுளுக்கு நன்றி. எங்களின் தனி விமானம் மோசமான வானிலையால் கிட்டத்தட்ட விபத்துக்குள்ளாகப் பார்த்தது. தற்போது பத்திரமாக வீட்டிற்கு செல்கிறோம். நன்றி கடவுளே.
விமானிகள்
நாங்கள் உயிருடன் இருக்க காரணமாக இருந்த விமானிகள் அருமையாக செயல்பட்டதற்கு நன்றி. ஆனால் நடுவானில் விமானிகள் பிரார்த்தனை செய்தால் அது மோசமானது.
உயிர்
எங்களின் விமானிகள் அருமையானவர்கள். எங்களின் உயிர்கள் அவர்களின் கையில் இருந்தது அதை அவர்கள் காப்பாற்றவிட்டனர்.

சாப்பாடு
இன்று நடந்த சம்பவத்திற்கு பிறகு நாங்கள் சாப்பிட காரை நிறுத்திய முதல் இடம்! @DanielWeber99 @tomas_moucka @911Yusuf @ansh_rulez @yofrankay


Click it and Unblock the Notifications