'கவர்ச்சிப் புயல்' சன்னி லியோனின் அடுத்த பட டீசர்!
மும்பை : கவர்ச்சிப் புயல் சன்னி லியோன் தற்போது பாலிவுட்டில் மையம் கொண்டுள்ளார். தமிழ், கன்னடம், மராத்தி படங்களில் ஒரு பாடலில் ஆடவே கோடிக்கணக்கில் கேட்கிறாராம்.
பாலிவுட்டில் பட்டையைக் கிளப்பி வரும் இவர் 'பி.எஸ்.வி.கருடவேகா' படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருக்கிறார். இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது.

இந்நிலையில், சன்னி லியோன் கதாநாயகியாக நடித்திருக்கும் 'டெரா இன்டெஸார்' படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியிருக்கிறது. இந்தப் படத்திலும் கவர்ச்சி விருந்து படைத்திருக்கிறார் சன்னி லியோன்.
'டெரா இன்டெஸார்' படத்தில் அர்பாஸ் கான் நாயகனாக நடித்திருக்கிறார். இந்தப் படத்தை ராஜீவ் வாலியா இயக்கியிருக்கிறார். மியூசிக்கல் ரொமான்டிக் த்ரில்லர் படமான இது நவம்பர் மாதம் 24-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது.
Comments


Click it and Unblock the Notifications