அட நம்ம சன்னி லியோனா இது.. ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய ‘வீரமாதேவி’!

சன்னி லியோனின் வீரமாதேவி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

Recommended Video

ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய சன்னி லியோன் வீரமாதேவி- வீடியோ

சென்னை: சன்னி லியோன் நடித்துள்ள வீரமாதேவி படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

வி.சி.வடிவுடையான் இயக்கத்தில் சன்னி லியோன் நாயகியான நடித்துள்ள படம் 'வீரமாதேவி'. நாயகியை முன்னிலைப்படுத்தும் கதைக்களம் கொண்ட இப்படத்தில் சன்னி லியோன் கதையின் நாயகியாக நடித்துள்ளார். அம்ரிஷ் இசையமைத்துள்ள இப்படத்தில் நாசர், நவ்தீப் போன்றோரும் நடித்துள்ளனர்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் பர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது. போர்க் கவசங்கள் அணிந்து, அழகிய ராணி போல சன்னி லியோன் காட்சியளிக்கும் பர்ஸ்ட் லுக் இணையத்தில் வைரலாகியுள்ளது.

ஆபாசப்பட நடிகை:

ஆபாசப்பட நடிகை:

ஆபாச படங்களில் நடித்து பிரபலமானவர் சன்னி லியோன். பின்னர் பாலிவுட் நடிகையான இவர், தமிழில் வடகறி படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடினார். அதன் தொடர்ச்சியாக தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் உருவாகி வரும் வீரமாதேவி படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.

வரலாற்றுப்படம்:

வரலாற்றுப்படம்:

வரலாற்றுப்படமான வீரமாதேவிக்காக சன்னி லியோன், வாள் சண்டை, குதிரையேற்றம் போன்றவற்றை கற்றுக் கொண்டு நடித்துள்ளார். இப்படத்திற்காக சன்னி லியோன் 150 நாட்கள் கால்ஷூட் கொடுத்துள்ளார்.

பர்ஸ்ட் லுக் போஸ்டர்:

பர்ஸ்ட் லுக் போஸ்டர்:

பாலிவுட்டில் கவர்ச்சியான வேடங்களில் நடித்து வரும் சன்னி லியோன் இப்படத்திற்காக ராணி வேடம் ஏற்று, ஆக்சன் காட்சிகளில் நடித்துள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் ராணி உடையில் கையில் வாளுடன் குதிரையில் அமர்ந்தவாறே சன்னி கம்பீரமாக போஸ் கொடுத்துள்ளது அவர்களது ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

நம்பிக்கை:

நம்பிக்கை:

இந்தப் படத்தின் ரிலீசிற்குப் பின் தனது அடையாளம் மாறும் என முன்பொரு பேட்டியில் சன்னி லியோன் தெரிவித்திருந்தார். தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மூலமே அவர் கவர்ச்சியைத் தாண்டி ஆக்சன் நாயகியாகவும் இந்திய சினிமாவில் தனக்கென ஒரு இடம் பிடிப்பார் என்பது உறுதியாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X