சன்னி லியோனின் குரங்கு சேஷ்டை.. மரத்தின் மீது தாவி.. என்னம்மா போஸ் கொடுக்குறார்.. வைரலாகும் வீடியோ!

மும்பை: பாலிவுட்டின் செக்ஸி குயின் சன்னி லியோன் மரத்தின் மீது ஏறி, தாவி போஸ் கொடுக்கும் வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.

பார்ன் நடிகையாக இருந்து பாலிவுட் நடிகையாக முன்னேறியுள்ளார் சன்னி லியோன். பாலிவுட் மட்டுமின்றி, கோலிவுட், டோலிவுட், மல்லுவுட் என பல மொழி படங்களிலும் சன்னி லியோன் நடித்து வருகிறார்.

கரஞ்சித் கவுர் எனும் சன்னி லியோனின் வாழ்க்கை வரலாறு வெப் தொடர் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

பிக்பாஸ் மேடை

பிக்பாஸ் மேடை

சிறு வயது முதலே துணிச்சலான பெண்ணாக வளர்ந்த சன்னி லியோன் ஆபாச பட உலகில் முன்னிலை வகித்தார். ஆனால், அந்த துறை அவருக்கு போர் அடித்து போக, இந்தியில் சல்மான் கான் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 5ம் சீசனில் கலந்து கொண்டு, பாலிவுட் நடிகையாக கொஞ்சம் கொஞ்சமாக மாறினார்.

எக்கச்சக்க தாராளம்

எக்கச்சக்க தாராளம்

ஜிஸ்ம் 2, ராகினி எம்.எம்.எஸ்., ஏக் பஹலி லீலா, மஸ்திஜாதே, ஒன் நைட் ஸ்டாண்ட், லவ் யூ ஆலியா, பெய்மன் லவ், ராய்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தமிழில் நடிகர் ஜெய்யுடன் வடகறி படத்தில் ஒரு பாட்டுக்கு செம்ம தாராளம் காட்டி ஆடி சென்றார்.

வெற்றி கொடுத்த வெப் சீரிஸ்

வெற்றி கொடுத்த வெப் சீரிஸ்

பாலிவுட் படங்களில் நடித்து வந்தாலும் கவர்ச்சியான கேரக்டர்களே நடிகை சன்னி லியோனுக்கு கிடைத்தன. மேலும், பெரிய நடிகர்கள் படங்களில் ஒரு பாட்டுக்கு நடனமாட மட்டுமே சன்னி லியோன் அழைக்கப்பட்டார். இந்நிலையில், தனது வாழ்க்கை வரலாற்றை கரஞ்சித் கவுர் எனும் வெப் சீரீஸாக எடுத்த சன்னி லியோனுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்தது. அதன் இரண்டு பாகங்களும் பாலிவுட்டில் ஹிட் அடித்தது.

வீரமாதேவி எப்போ?

வீரமாதேவி எப்போ?

கரஞ்சித் கவுர் வெற்றியை தொடர்ந்து வீரமாதேவி எனும் வரலாற்று படத்தை மல்டி லேங்குவேஜில் எடுக்க சன்னி லியோன் முடிவு செய்தார். தம்பி வெட்டோத்தி சுந்தரம், சவுக்கார்பேட்டை, பொட்டு படங்களை இயக்கிய வி.சி. வடிவுடையான் சன்னி லியோனின் வீரமாதேவியை இயக்க முன் வந்தார். ஆனால், அந்த படம் தற்போது பாதியிலேயே நிற்கிறது. எப்போது வெளியாகும் என்ற தகவல் இல்லை.

கிளாமர் புகைப்படங்கள்

கிளாமர் புகைப்படங்கள்

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதுமே தனது ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து கொடுத்து வருகிறார் சன்னி லியோன். திராட்சை குளியல், தக்காளி பழங்களுடன் விளையாட்டு, ஸ்கேட்டிங் செய்வது என குறும்புத்தனமான வீடியோக்களையும் பகிர்ந்து சமீப காலமாக தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

குரங்கு சேஷ்டை

இந்நிலையில், தற்போது மரம் ஒன்றின் மீது தாவி, ஏறி அமரும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு சன்னி லியோன் வைரலாக்கி வருகிறார். கருப்பு நிற டி-ஷர்ட் மற்றும், வெளிர் நிற பேன்ட் அணிந்து மரத்தின் மீது ஏறும் சன்னி லியோனின் வீடியோவை போட்ட சில நிமிடங்களுக்குள் 1.5 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X