புது பிஸினஸில் களமிறங்கும் சன்னி லியோன்!

By Vignesh Selvaraj

மும்பை : ஆபாசப் பட நடிகையாக இருந்து இப்போது பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாகக் கலக்கி வருபவர் சன்னிலியோன். தமிழில் ஜெய் நடித்த 'வடகறி' படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினார். அதன்பிறகு அவருக்கு தமிழில் சான்ஸ் கிடைக்கவில்லை.

கடைசியாக, தெலுங்கில் டாக்டர் ராஜசேகர் நடித்து வெளியான 'பி.எஸ்.வி கருட வேகா' படத்தில் அவருடன் ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனமாடியிருந்தார் சன்னிலியோன். சன்னி லியோன் நடித்த 'டெரா இன்டெஸார்' பாலிவுட் படம் வரும் டிசம்பர் 1-ம் தேதியன்று வெளியாகவிருக்கிறது.

Sunny leone starts new business

மேலும், சினிமாவில் நடித்துக்கொண்டே தனது கணவர் டேனியேல் வெப்பருடன் இணைந்து ஆடைகள் மற்றும் அழகு சாதனப் பொருட்களை வியாபாரம் செய்து வருகிறார் சன்னிலியோன். பிரபல பிராண்ட்களின் விளம்பர மாடலாகவும் வருகிறார் சன்னி லியோன்.

அதையடுத்து தற்போது சொந்தமாக மொபைல் போன் பிராண்ட் ஒன்றைத் தொடங்கவிருக்கிறார் சன்னி . இந்த மொபைல் வியாபாரத்தை சீனாவைச் சேர்ந்த ஒரு நிறுவனத்துடன் இணைந்து பெரிய அளவில் நடத்தப் போகிறாராம் சன்னி லியோன்.

சன்னி லியோன் மொபைல் பிராண்ட் விற்பனைக்கு வந்தால் ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெறும் என்பது மட்டும் உறுதி. சன்னி லியோனைப் போலவே அவரது மொபைல் பிராண்டும் கவர்ச்சிகரமான அம்சங்களோடு மார்க்கெட்டுக்கு வருமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X