சதீஷூக்கு அடித்தது ஜாக்பாட்… கவர்ச்சி புயலுடன் இணைந்து நடிக்கிறார் !

சென்னை : காமெடி நடிகர் சதீஷ் ஹீரோவாக நடிக்கும் ஹாரர் , காமெடி திரைப்படத்தில் சன்னி லியோன் ஹீரோயினாக நடிக்கிறார்.

இந்தபடத்தை சிந்தனை செய் படத்தை இயக்கிய யுவன் இயக்குகிறார்.

இப்படத்திற்கான பூஜை நேற்று போடப்பட்டது. இதில்,மொட்டை ராஜேந்திரன், ராமேஸ் திலக் ஆகியோர் நடிக்கின்றனர்.

கனடாவில் பிறந்தார்

கனடாவில் பிறந்தார்

கனடாவில் பிறந்த இந்திய வம்சாவளிக் குடும்பத்தைச் சேர்ந்த சன்னி லியோன் அடல்ட்ஸ் ஒன்லி படங்களில் நடித்து பிரபலமானார். தமிழில் ஜெய் நடித்த வடகறி படத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக வடிவுடையான் இயக்கத்தில் வீரமாதேவி என்ற படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் சன்னி லியோன் நடிக்க எதிர்ப்புகள் கிளம்பின.

ஹீரோயினாக

ஹீரோயினாக

இந்நிலையில் அடுத்ததாக புதிய தமிழ்ப்படமொன்றில் ஹீரோயினாக நடிக்க சன்னி லியோன் ஒப்பந்தமாகியுள்ளார். வரலாற்றுப் பின்னணியில் திகில் நகைச்சுவை ஜானரில் உருவாக உள்ள படத்தில் சன்னி லியோன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். திறமையானவராகவும், வலிமையாக இருப்பதால் சன்னி லியோனை நடிக்க வைக்க முடிவெடுத்ததாகவும், அவருக்கு கதை மிகவும் பிடித்திருந்ததாகவும் இயக்குநர் யுவன் தெரிவித்துள்ளார்.

பூஜை போட்டாச்சு

பூஜை போட்டாச்சு

சன்னி லியோன் உடன் நடிகர் சதீஷ், மொட்டை ராஜேந்திரன், ரமேஷ் திலக் உள்ளிட்டோர் நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கியது. இன்னும் பெயரிடப்படாத இத்திரைப்படத்துக்கு மாநகரம் படத்தின் இசையமைப்பாளர் ஜாவித் ரியாஸ் இசையமைக்கிறார்.

Recommended Video

V-CONNECT | MASTER LALITHA SHOBI CHAT | அஜித் சாருக்கு DANCE பண்ண ரொம்ப பிடிக்கும் | FILMIBEAT TAMIL
ஹாரர், காமெடி படம்

ஹாரர், காமெடி படம்

சன்னி லியோன் உடன் வரலாற்று பின்னணி கொண்ட ஹாரர் காமெடி படத்தில் தான் நடிக்க இருப்பது பெரும் மகிழ்ச்சி அளிப்பதாக நடிகர் சதீஷ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். சதீஷ் ஏற்கனவே புதுமுக இயக்குனர் கிஷோர் ராஜ்குமார் இயக்கும் படத்தில் ஹீரோவாகி இருக்கிறார். இப்படத்தில் குக்வித்கோமாளி புகழ் பவித்ரா லஷ்மி கதாநாயகியாக நடிக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X