சூனியக்காரியான சன்னிலியோன்.. பாலிவுட்டில் களைகட்டியது ஹாலோவின் திருவிழா!

ஹாலிவுட்டில் பிரபலமாக கொண்டாடப்பட்டு வரும் ஹாலோவின் திருவிழா, தற்போது பாலிவுட்டிலும் களைகட்ட தொடங்கியுள்ளது.

மும்பை: ஹாலோவின் திருவிழா நேற்று இரவு கொண்டாடப்பட்டது. ஹாலிவுட்டில் பிரபலமாக கொண்டாடப்பட்டு வரும் இந்த திருவிழா ஜூரம் தற்போது பாலிவுட் பிரபலங்களிடமும் ஒட்டிக் கொள்ளத் தொடங்கியுள்ளது.

விதவிதமான பேய் பட தீம் உடைகளை அணிந்து பாலிவுட் நடிகர்கள் ஹாலோவின் திருவிழாவை கொண்டாடி உள்ளனர். அவர்கள் பதிவிட்ட ஹாலோவின் கொண்டாட்ட புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.

பேயான சன்னிலியோன்

பேயான சன்னிலியோன்

ஹாலோவின் திருவிழாவை முன்னிட்டு பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன், தனது கணவர் டேனியல் வெப்பருடன் ஹாலோவின் திருவிழாவை கொண்டாடியுள்ளார். பிரபல ஓவியர் ஃப்ரீடா காலோவின் ஓவியங்களில் வரும் சூனியக்காரியை போல உடை அணிந்து போஸ் கொடுத்தார். மேலும், பேய் படங்களில் வரும் காப்லின் மற்றும் கவுல் கதாபாத்திரங்களுக்கு இந்த ஹாலோவினில் வாழ்த்து கூறுவதாக கூறினார். அவரது புகைப்படம் இன்ஸ்டாவில் வைரலாகி வருகிறது.

அனார்கலி

அனார்கலி

ஃபேஷன் திருவிழாவாக மாறியுள்ள ஹாலோவின் திருவிழாவில் தனது ஸ்டைலில் அனார்கலி கெட்டப்பில் வந்து அசத்தியுள்ளார் பாலிவுட் நடிகை சோனம் கபூர். சோனம் கபூரின் கணவர் ஆனந்த் அஹுஜா இளவரசர் சலீம் வேடத்திலும், சோனம் கபூர் கைதி போன்று விலங்கு பூட்டிய கைகளுடன் அனார்கலியாகவும் உள்ள புகைப்படங்கள் பாலிவுட் பிரபலங்களையே ஆச்சர்யபட வைத்துள்ளது.

எமி ஜாக்சன்

எமி ஜாக்சன்

கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என கலக்கி வரும் நடிகை எமி ஜாக்சன், ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் படத்தில் நாயகி அணிந்திருக்கும் கவுன் மற்றும் விக்கை அணிந்து கொண்டு விலையுயர்ந்த காருடன் போஸ் கொடுத்து இந்த ஹாலோவினை கொண்டாடியுள்ளார்.

மென் இன் பிளாக் தீம்

மென் இன் பிளாக் தீம்

சச்சின் படத்தில் விஜய்யுடன் நடித்த பாலிவுட் நடிகை பிபாஷா பாசு, இந்த ஹாலோவின் திருவிழாவுக்கு மென் இன் பிளாக் தீமை தேர்ந்தெடுத்துள்ளார். அவருடன் பாலிவுட் நடிகர்கள் கரண் சிங் க்ரூவர், அயாஸ் கான், நீலம் கோத்தாரி உள்ளிட்டோர் ஹாலோவின் திருவிழாவை கொண்டாடியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X