சன்னி லியோன் எப்படா சேச்சி ஆனாங்க..? பிகினி ஸ்டில் வெளியிட்ட பிரபல நடிகையிடம் ஃபேன்ஸ் கலாய்!

By

சென்னை: நடிகை சன்னி லியோன் வெளியிட்ட பிகினி புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தற்போது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் இருக்கிறார், பிரபல நடிகை சன்னி லியோன்.

கொரோனா லாக்டவுன் நேரத்தில் மும்பையில் இருந்த அவர், சிறப்பு விமானம் இயக்கப்பட்டதும் அங்கு பறந்துவிட்டார்.

கருப்பு நிற பிகினி

கருப்பு நிற பிகினி

அங்கும் தனது நண்பர் மற்றும் தோழிகளுடன் ஜாலியாக ஊர் சுற்றும் சன்னி, அது தொடர்பான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் தனது நெருங்கிய தோழியும், பிரபல ஹேர் ஸ்டைலிஷ்ட்டுமான நுரியா கான்ட்ரராஸ் உடன் கருப்பு நிற பிகினி உடையில் அவர் வெளியிட்ட பிகினி புகைப்படம் வைரலானது. லட்சக்கணக்கான லைக்ஸ்களை பெற்றது அந்த போட்டோ.

கலிபோர்னியா

கலிபோர்னியா

இந்நிலையில், இப்போது புதிய பிகினி போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார். கலிபோர்னியா கடற்கரையில் இருந்து அவர் எடுத்துள்ள இந்த போட்டோவும் வைரலாகி வருகிறது. இதற்கு கேப்ஷனாக, 'கடற்கரையில் சமூக இடைவெளியை கடைபிடிக்கிறேன். இதைவிட சிறப்பாக கடைபிடிக்க முடியாது. கலிபோர்னியா லவ்' என்று கூறியுள்ளார்.

மலையாள ரசிகர்

மலையாள ரசிகர்

இந்த பிகினி புகைபடத்தை லட்சக்கணக்கானோர் லைக் செய்துள்ளனர். இதற்கு ஆயிரணக்கானோர் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். ஒரு மலையாள ரசிகர், அவரை சேச்சி என்று அழைத்திருக்கிறார். 'சன்னி லியோன், எப்படா சேச்சி ஆனாங்க? என்று கேட்டிருக்கிறார், மற்றொரு ரசிகர். சிலர் மாஸ்க் இல்லையே எங்கே என்றும், இன்ஸ்டா பாவம், அதை ஹாட்டா ஆக்காதீங்க என்றும் கூறியுள்ளனர்.

மாஸ்க் எங்கே?

மாஸ்க் எங்கே?

அக்கா லொகேஷன் எங்கே? என்று கேட்டிருக்கிறார் ஒரு பாசக்கார நெட்டிசன் தம்பி. பலர் அவர் அழகை, கண்டபடி வர்ணித்துள்ளனர். சும்மாவே அமெரிக்காவுல கொத்து கொத்தா பரவுது கொரோனா, மாஸ்க் இல்லாம ஏன் இப்படி இருக்கீங்க. முதல்ல அதை போடுங்க என்று பலர் அட்வைஸ் செய்துள்ளனர். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

திணறடித்தார்

திணறடித்தார்

பாலியல் படங்களில் நடித்து வந்த சன்னி லியோன், பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார், இப்போது. 2012 ஆம் ஆண்டு பூஜா பட் இயக்கிய ஜிஸ்ம் 2 என்ற படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமாகி, கிளாமரால் ரசிகர்களை திணறடித்தார். தொடர்ந்து ஜாக்பாட், ராகினி எம்.எம்.எஸ் 2, ஹேட் ஸ்டோரி 2 உட்பட பல படங்களில் நடித்தார். தொடர்ந்து நடித்து வருகிறார்.

Recommended Video

Sunny Leone First debut movie Hits screen | Pirates of Blood
தமிழில் வடகறி

தமிழில் வடகறி

அப்படியே தென்னிந்திய சினிமாவுக்கும் வந்த சன்னி லியோன், மலையாளத்தில் மதுரராஜா என்ற படத்தில் ஒரு பாடல் காட்சியில் நடித்திருந்தார். தமிழில், ஜெய், ஸ்வாதி நடித்த வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார். இப்போது மீண்டும் ஒரு மலையாளப் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்தப் படத்துக்கு ரங்கீலா என்று டைட்டில் வைத்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X