கருப்பு நிற பிகினியில், தோழியுடன் பிரபல நடிகை.. வைரலாகும் போட்டோ.. வசமாக வர்ணிக்கும் ரசிகர்கள்!
சென்னை: பிரபல நடிகை சன்னி லியோன் வெளியிட்டுள்ள புதிய பிகினி புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பாலியல் படங்களில் நடித்து வந்த சன்னி லியோன், பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார், இப்போது.
2012 ஆம் ஆண்டு பூஜா பட் இயக்கிய ஜிஸ்ம் 2 என்ற படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமாகி ரசிகர்களை திணறடித்தார். தொடர்ந்து ஜாக்பாட், ராகினி எம்.எம்.எஸ் 2, ஹேட் ஸ்டோரி 2 உட்பட பல படங்களில் நடித்தார்.

தமிழில் வடகறி
அப்படியே தென்னிந்திய சினிமாவுக்கும் வந்த சன்னிலியோன், மலையாளத்தில் மதுரராஜா என்ற படத்தில் ஒரு பாடல் காட்சியில் நடித்திருந்தார். தமிழில், ஜெய், ஸ்வாதி நடித்த வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார். இப்போது மீண்டும் ஒரு மலையாளப் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்தப் படத்துக்கு ரங்கீலா என்று டைட்டில் வைத்துள்ளனர்.

இந்தியா முழுவதும்
தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ள சன்னிக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள். இவரது கணவர் டேனியல் வெபர். நிஷா என்ற பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்க்கும் சன்னி, வாடகைத்தாய் மூலம் பெற்ற ஆசேர் மற்றும் நோவா சிங் என்ற குழந்தைகளையும் வளர்த்து வருகிறார். படங்கள், பாடல்களை தாண்டி சன்னி லியோன், சமூக வலைதளங்களில் வெளியிடும் போட்டோக்களால் எப்போதும் பரபரப்பாகவே இருந்து வருகிறார்.

லாஸ் ஏஞ்சல்ஸ்
கொரோனா தீவிரம் அடைந்தபோது மும்பையில் இருந்த சன்னி லியோன் பிறகு சிறப்பு விமானம் மூலம் அமெரிக்கா சென்றுவிட்டார். இதை அவர் தனது சமூக வலைத்தள பக்கம் மூலம் தெரிவித்திருந்தார். அங்கு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் குடும்பத்துடன் இருக்கும் அவர், தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அங்கிருந்து அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

கருப்பு நிற பிகினி
இந்நிலையில், புதிய புகைப்படம் ஒன்றை இன்று அவர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் தனது நெருங்கிய தோழியும், பிரபல ஹேர் ஸ்டைலிஷ்ட்டுமான நுரியா கான்ட்ரராஸ் (Nuria Contreras)உடன் கருப்பு நிற பிகினி உடையில் ஸ்டைலாக நிற்கிறார். நீச்சல்குளத்துக்கு செல்லும் முன் எடுக்கப்பட்ட போட்டோ அது. வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கான லைக்ஸ்களை பெற்றிருக்கிறது அந்த போட்டோ.

அங்கயே இருந்துடாதீங்க
இதற்கு ரசிகர்கள் கண்டபடி கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஒருவர் சும்மாவே நீங்க ஹாட்.. பிகினியில் ஹாட்டோ ஹாட் என்று கூறியுள்ளார். நீங்க எப்ப இந்தியாவுக்கு வருவீங்க, அங்கேயே இருந்துடாதீங்க என்று ஒரு நெட்டிசன் ஏக்கமாகக் கேட்டிருக்கிறார். ஒரு ரசிகை, உங்களை மாதிரியே எனக்கும் பிகினி டிரெஸ் அணியணும்னு ஆசையா இருக்கு என்று தெரிவித்துள்ளார்.
Recommended Video

இரண்டு அழகிகள்
'ரெண்டு பேருமே செமயா இருக்கீங்க.. ஒரே போட்டோவில் இரண்டு அழகிகள்.. என்று ஒருவர் கலாய்த்துள்ளார். இந்த மாதிரி நடிகைகளை அழைச்சுட்டு வந்து பாலிவுட்ல முக்கியத்துவம் கொடுக்கிறாங்க. ஆனா, நிஜமாகவே திறமை உள்ளவங்களை கண்டுக்க மறுக்கிறாங்க என்று ஒருவர் காட்டமாக கேட்டுள்ளார். சன்னி லியோனின் இந்த போட்டோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











