தெலுங்கு வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் சன்னி லியோன்!!

By Shankar

சன்னி லியோனின் கவனம் அடுத்து தெலுங்குப் பக்கம் திரும்பியிருக்கிறது. ஆமாம்.. தமிழில் வெளியாகி பெரும் வெற்றிப் பெற்ற வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் தெலுங்குப் பதிப்பில் பிந்து மாதவி வேடத்தில் நடிக்கப் போகிறவர் சன்னி லியோன்தான்.

கனடாவில் பிறந்த இந்தியப் பெண்ணான சன்னி லியோன், நடித்து பிரபலமானதெல்லாம் பலான படங்களில்தான். இப்போதும் அவரது ஆபாசப் படங்களில் பல லட்சம் இணையதளங்களில் கொட்டிக் கிடக்கின்றன.

பாலிவுட்டில்

பாலிவுட்டில்

இருந்தாலும் அவர் மீது ஒரு தனி ஈர்ப்பு இந்திய சினிமாக்காரர்களுக்கு. அச்சாரம் வைத்து அழைத்து வந்து இந்திப் படத்தில் வாய்ப்பு கொடுத்தார்கள். அவருக்கு நேரம் ஒர்க் அவுட் ஆகிவிட்டது. அடுத்தடுத்து அவர் நடித்த படங்கள் நன்றாக ஓட, கோடிகளில் கொட்டிக் கொடுக்கிறார்கள் பாலிவுட்காரர்கள்.

வடகறியில்

வடகறியில்

அடுத்து தமிழ்ப் படங்களிலும் நடிக்க ஆரம்பித்துவிட்டார். வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு ஆடிய சன்னி லியோன், அடுத்து ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்திலும் ஒரு குத்து பாடலுக்கு சன்னி லியோன் ஆடி உள்ளதாகக் கூறப்படுகிறது . மேலும் ஒரு தமிழ்ப் படத்திலும் நடிக்கிறார்.

தெலுங்கில்

தெலுங்கில்

இன்னொரு பக்கம் தெலுங்கிலும் அவருக்கு வாய்ப்புகள் வர ஆரம்பித்துள்ளன. சத்யராஜ், சிவகார்த்திகேயன், திவ்யா, பிந்து மாதவி ஆகியோர் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் பெரும் வெற்றியை பெற்றது. இந்தபடம் தெலுங்கில் ரீமேக் செய்யபடுகிறது.

பெரிய வேடம்

பெரிய வேடம்

படத்தில் ஜெகபதி பாபு, மஞ்சு மனோஜ், ராகுல் பிரீத் சிங் ஆகியோர் நடிக்கிறார்கள். தமிழில் பிந்து மாதவி நடித்த டீச்சர் வேடத்தில் நடிக்க சன்னி லியோனுக்கு அழைப்பு விடுக்க, அவரும் மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டாராம். தமிழில் தந்தது போல சின்ன வேடமாக இல்லாமல், ஒரு பாடலுடன் கூடிய பெரிய வேடமாக மாற்றியுள்ளார்களாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X