'சொர்க்கத்திலிருந்து கிடைத்த பரிசு'... சன்னி லியோன் ஹேப்பி அண்ணாச்சி!
தனது மகள் சொர்க்கத்திலிருந்து கிடைத்த பரிசு என சன்னி லியோன் தெரிவித்துள்ளார்.
மும்பை: தன்னுடைய மகள் சொர்க்கத்திலிருந்து கிடைத்த பரிசு என சன்னிலியோன் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகை சன்னி லியோன் தற்போது இந்தியாவின் முக்கிய நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார். பொதுவாக குழந்தைகள் மீது ஆர்வம் கொண்ட இவர், குழந்தை பெற்றுக்கொள்ளாமல் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

அவருடை கணவர் டேனியல் வெபர் மற்றும் கரெஞ்ஜித் கவூர் வெப் சீரீஸ் தயாரிப்பாளருடன் சேர்ந்து விநாயகர் சதுர்த்தியை குதூகலமாகக் கொண்டாடினார். அப்போது சன்னிலியோனின் வளர்ப்பு மகள் நிஷா கவூர் பெற்றோருக்கு ஆசீர்வாதம் அளிப்பது போன்று எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.
அந்த புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ள சன்னி, நிஷா கவூர் சொர்க்கத்திலிருந்த கிடைத்த பரிசு என பெருமிதத்தோடு தெரிவித்துள்ளார்.
இந்த விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு அழைத்த கரெஞ்ஜித் கவூர் தயாரிப்பாளர் கிஷோர் அரோரா குடும்பத்திற்கு நன்றி தெரிவித்தும் அவர் ட்வீட் செய்துள்ளார்.
மேலும், இதுபோன்ற நிறைய நிகழ்வுகளில் கலந்துகொள்ள ஆர்வமாக இருப்பதாகவும், மகள் நிஷா கவூர் சிறுமியாக இருப்பதால் எல்லா இடத்திற்கும் அழைத்துச் செல்வது கடினமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆரம்ப காலத்தில் ஆபாசபட நடிகையாக திரைவாழ்க்கையைத் துவங்கிய சன்னி, இப்போது பல படங்களில் நடித்துவருவதோடு பொருப்பான குடும்பப் பெண்ணாகவும் மாறிவிட்டார். ஆபாசப் பட நடிகை என விமர்சித்தவர்கள் சன்னிலியோனை ஆகா ஓகோ என கொண்டாடுகின்றனர்.


Click it and Unblock the Notifications











