கவர்ச்சிக் குத்தாட்ட கச்சேரி... சென்னையைக் கலக்க வரும் சன்னி லியோன்!

By Shankar

சென்னை: அமெரிக்காவில் மிகப் பிரபலமான ஆபாசப் பட நடிகை என்று தெரிந்தேதான் சன்னி லியோனை பாலிவுட்டுக்கு அழைத்து வந்தார்கள். ஜிஸ்ம் 2 ஒரே படம், அவரை பாலிவுட்டில் ரொம்ப பாப்புலராக்கிவிட்டது.

இப்போது பல படங்கள் நடித்துவிட்டார். தென்னிந்திய மொழிப் படங்கள் மீதும் ரொம்ப ஆர்வம் காட்டுகிறார். தமிழில் வடகறி என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி தமிழ் ரசிகர்களை அதிகம் கூகுளைத் தேட வைத்தார்.

ரசிகர்கள்

ரசிகர்கள்

இந்தியா முழுவதும் செல்லும் இடங்களிலெல்லாம் இவருக்கு ரசிகர்கள் அமோக ஆதரவு தருகிறார்கள். இங்கே உள்ள நடிகைகளை விட, சன்னி லியோனுக்கு கூடுதல் வரவேற்பு கிடைக்கிறது.

திரண்ட கூட்டம்

திரண்ட கூட்டம்

கற்றறிந்த மாநிலம், நடிகர் நடிகைகளை கண்டு கொள்ளாத மக்கள் எனப்படும் கேரளாவுக்கு சில வாரங்கள் முன்பு சன்னி லியோன் வந்தார். கொச்சி நகரமே திக்குமுக்காடிப் போனது, சன்னி லியோனைப் பார்க்க வந்த கூட்டத்தால்.

டிசம்பர் 2

டிசம்பர் 2

சன்னி லியோனின் அடுத்த இலக்கு சென்னை. ஏதும் கடைத் திறப்பு விழாவுக்கு அவர் வரவில்லை. ஒரு இசை நிகழ்ச்சியில் கவர்ச்சிக் குத்தாட்டம் போட வருகிறார். வருகிற டிசம்பர் 2-ஆம் தேதி இ.வி.பி பிலிம் சிட்டியில் இந்த இசை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் சன்னி லியோன் செம ஆட்டம் போடவிருக்கிறார்.

ஆண்ட்ரியா

ஆண்ட்ரியா

இந்த நிகழ்ச்சியில் பிரபல நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியா பாடல்களைப் பாடவிருக்கிறார். கவர்ச்சியில் அவரும் சன்னி லியோனுக்கு சளைத்தவர் அல்லவே... அதனால் பாடலுடன் நடனமும் உண்டாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X