செக் பவுன்ஸ்.. கடுப்பில் இடுப்பாட்ட ’நோ’ சொன்ன சன்னி லியோன்!

குஜராத்தில் நடைபெறவுள்ள பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சியான ‘அபிமன்யு’வில் கலந்து கொள்ளப்போவதில்லை என நடிகை சன்னி லியோன் அறிவித்துள்ளார்.

மும்பை: பாலிவுட்டின் கவர்ச்சி நடிகையான சன்னி லியோன், குஜராத்தில் நடைபெறவுள்ள பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சியான 'அபிமன்யு'வில் கலந்து கொள்ளப்போவதில்லை என அறிவித்துள்ளார்.

கதக் மற்றும் ஹிப்ஹாப் நடனத்தை ஒன்றிணைத்து நடனமாட சில வாரங்களாக பயிற்சி பெற்று வந்த சன்னி லியோன், திடீரென இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்கள் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கு அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளார்.

இசை நிகழ்ச்சியில் நடனமாட நடிகை சன்னி லியோனுக்கு வழங்கப்பட்ட செக்குகள் தொடர்ந்து பவுன்ஸ் ஆனதே இந்த அறிவிப்புக்கு காரணம் என்ற தகவலும் கிடைத்துள்ளது.

10 ஓவர் கிரிக்கெட்

10 ஓவர் கிரிக்கெட்

டெஸ்ட் கிரிக்கெட், ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் கொஞ்சம் கொஞ்சமாக இறந்து வருவதற்கான அடையாளமாக டி-20 கிரிக்கெட் போட்டிகள் ஐபிஎல் எனும் பேரில் களைகட்டி வருகின்றன. இந்நிலையில், வெறும் 10 ஓவர் கிரிக்கெட் போட்டி உருவாகியுள்ளது.

அபுதாபியில் வரும் நவம்பர் 14ம் தேதி முதல் 24ம் தேதி வரை பத்து நாட்கள் நடைபெறவுள்ள டி-10 கிரிக்கெட் போட்டியில் பங்குபெறும் டெல்லி புல்ஸ் அணியின் தூதராக நடிகை சன்னி லியோன் பொறுப்பேற்றுள்ளார்.

செக் பவுன்ஸ்

செக் பவுன்ஸ்

குஜராத்தில் உள்ள அகமதாபாத்தில், வரும் நவம்பர் 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை இரண்டு நாட்கள் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள ‘அபிமன்யு' இசை விழாவில் நடிகை சன்னிலியோன் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவருக்கு வழங்கப்பட்ட காசோலைகள் தொடர்ந்து பவுன்ஸ் ஆனதால், விழாவில் பங்கேற்க போவதில்லை என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

எப்படி நடக்கும்?

பிரபல கதக் நடனக் கலைஞரான சந்தீப் மகாவிர், பாரம்பரியமிக்க கதக் நடனத்தையும், ஹிப்ஹாப் நடனத்தையும் கலந்து புதுமையான ஒரு இசை மற்றும் நடன விருந்தை படைக்கும் ஏற்பாடை செய்து வருகிறார். நடிகை சன்னி லியோன் இதில், நடனமாட ஓகே சொல்லவில்லை என்றால், இந்த நிகழ்ச்சியை தன்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது என்று, சில நாட்களுக்கு முன்னர், சந்தீப் தெரிவித்திருந்தார்.

ஆனால், தற்போது அபிமன்யு இசை நிகழ்ச்சியில் நடனமாடப்போவதில்லை என சன்னிலியோன் வெளிப்படையாக அறிவித்துள்ள நிலையில், நிகழ்ச்சி நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

சமரசம்

பாலிவுட் நடிகை சன்னி லியோன் நடனமாடுகிறார் என்பதால் தான் அபிமன்யு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் மற்றும் டிக்கெட் விற்பனை சூடுபிடித்துள்ளது. செக் பவுன்ஸ் காரணமாக சன்னி லியோன் பங்கேற்க போவதில்லை என்ற தகவல் வெளியாகியுள்ள நிலையில், அவருக்கான சம்பளத்தை முறைப்படி கொடுத்து சமரசம் செய்யும் முயற்சியில் இசை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் ஈடுபட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X