ஷங்கர் படத்துக்குப் போட்டியாக சன்னி லியோன் படம் வருதா?.. ராவான கொட்டேஷன் கேங் ரிலீஸ் எப்போ தெரியுமா?

சென்னை: சன்னி லியோன், ஜாக்கி ஷெராஃப், சாரா அர்ஜுன் உள்ளிட்ட பலர் நடிப்பில் ராவான கேங்ஸ்டர் படமாக உருவாகி உள்ள 'கொட்டேஷன் கேங்' (Quotation Gang) திரைப்படம் வரும் ஜூலை மாதம் வெளியாகும் என சன்னி லியோன் தற்போது ட்வீட் போட்டு அறிவித்துள்ளார்.

ஆபாச நடிகையாக அமெரிக்காவில் கெட்ட ஆட்டம் போட்டு சர்வதேச அளவில் பிரபலமான சன்னி லியோன் அந்த தொழிலே வேண்டாம் என நினைத்து இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இந்தி படங்களில் கவர்ச்சி நடிகையாக மாறினார்.

Sunny Leone Shankar Indian 2 2

40 வயதுக்கு மேல் கவர்ச்சி எல்லாம் செட்டாகாது என நினைத்த சன்னி லியோன் தற்போது ஹீரோயின் சென்ட்ரிக் படங்களிலும் ஆக்‌ஷன் படங்களிலும் நடிக்க ஆரம்பித்துள்ளார். இந்தி மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய படங்களில் சமீப காலமாக சன்னி லியோன் நடித்து வருகிறார்.

சன்னி லியோன்: தமிழில் ஜெய் நடித்த வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டு ஆரம்பத்திலேயே தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தவர் சன்னி லியோன். கடந்த 2012ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான ஜிஸ்ம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். ஆபாச படங்களில் நடிப்பதை விட்டு விட்டு இந்தியாவுக்கு வந்து செட்டிலான சன்னி லியோன் தொடர்ந்து கவர்ச்சி நடிகையாக ஜாக்பாட், ராகிணி எம்எம்எஸ் 2, வடகறி, ஹேட் ஸ்டோரி 2, எக் பஹேலி லீலா, மஸ்திஜாதே, ஒன் நைட் ஸ்டாண்ட், பாய்ஸ், ஓ மை கோஸ்ட், கென்னடி, தீ இவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

கொட்டேஷன் கேங் ரிலீஸ்: மேலும், மலையாளத்தில் ரங்கீலா, தமிழில் வீரமாதேவி, கொட்டேஷன் கேங், ஷீரோ உள்ளிட்ட பல படங்கள் கைவசம் உள்ளன். இந்தி மற்றும் கன்னட மொழிகளிலும் சில படங்களில் நடித்து வருகிறார். தெய்வத்திருமகள் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பேபி சாரா மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் இளம் வயது நந்தினியாக நடித்திருந்தார். இந்த படத்தில் தம் அடிக்கும் தாறுமாறான ரோலில் நடித்துள்ளார். சன்னி லியோன் கேங்ஸ்டராக நடித்துள்ள இந்த படம் அடுத்த மாதம் வெளியாகிறது.

ஷங்கர் படத்துக்கு போட்டி?: இந்தியன் 2 திரைப்படம் ஜூலை மாதம் வெளியாக உள்ள நிலையில், அந்த படத்துக்கு போட்டியாக சன்னி லியோன் நடித்துள்ள கொட்டேஷன் கேங் படம் வெளியாகிறதா என்கிற கேள்வி எழுந்துள்ளது. இந்தியன் 2 ஜூலை 12ம் தேதி வெளியாக உள்ள நிலையில், சன்னி லியோன் படத்தின் ரிலீஸ் தேதி இன்னமும் அறிவிக்கவில்லை. ஜூலை மாதம் 20ம் தேதிக்கு மேல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டேட்டிங் ஷோ: வெளிநாடுகளில் பிரபலமான டேட்டிங் ஷோவை இந்தியாவிலேயே ஸ்ப்ளிட்ஸ்வில்லா என்கிற பெயரில் சன்னி லியோன் நடத்தி வருகிறார். எம் டிவி மற்றும் ஜியோ ஓடிடியில் ஒளிபரப்பாகி வரும் அந்த் டேட்டிங் ஷோ தமிழ் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது. சதீஷ், தர்ஷா குப்தா நடித்த ஓ மை கோஸ்ட் படம் சன்னி லியோனுக்கு சரியாக போகாத நிலையில், கொட்டேஷன் கேங் படம் எப்படி இருக்கும் என்பதை வெயிட் பண்ணித்தான் பார்க்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X