2012ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட சன்னி லியோன், பூனம் பாண்டே மற்றும் மூவர்!
மும்பை: 2012ம் ஆண்டில் இந்தியாவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நடிகை சன்னி லியோன் என்று தெரிய வந்துள்ளது.
கனடாவில் பிறந்து வளர்ந்தவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சன்னி லியோன். அங்கு ஆபாசப் படங்களில் நடித்து வந்த அவர் பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்ள இந்தியா வந்தார். அந்த ஷோ மூலம் இங்கு பிரபலம் ஆனார். அவரே நினைத்துப் பார்க்காதபடி பாலிவுட் படமான் ஜிஸ்ம் 2விலும் ஹீரோயினாக நடித்தார். அந்த படம் ரிலீஸானபோது படத்தைப் பார்த்தவர்கள் அவருக்கு நடிக்கவே தெரியவில்லை என்று விமர்சித்தனர்.
இந்த விமர்சனத்தைக் கேட்ட சன்னியோ தனக்கு நடிக்கத் தெரியாது என்று கூறியவர்கள் கண்முன்பே நடித்துக் காட்டுகிறேன் என்று சவால் விட்டுள்ளார். இந்நிலையில் 2012ம் ஆண்டில் இந்தியாவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நடிகை சன்னி லியோன் என்று தெரிய வந்துள்ளது.

அதிகம் கூகுள் பண்ணப்பட்ட சன்னி
சன்னி லியோன் பாலிவுட் படத்தில் நடிக்க வந்தது 2012ல் தான். இந்நிலையில் 2012ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நடிகையாக சன்னி லியோன் உள்ளார்.

குண்டான ஐஸ்
சன்னிக்கு அடுத்தபடியாக ஐஸ்வர்யா ராய் பிரசவத்திற்கு பிறகு வெயிட் போட்ட விஷயம் பற்றி கூகுளில் அதிகம் தேடப்பட்டுள்ளது.

டிரஸ் பிடிக்காத பூனம் பாண்டே
அவ்வப்போது அரைநிர்வாண போஸ் போட்டோ வெளியிடும் மாடலும், நடிகையுமான பூனம் பாண்டே கூகுளில் அதிகம் தேடப்பட்ட நடிகைகளில் 3வது இடத்தில் உள்ளார்.

ஹீரோயின் கரீனா கபூர்
அதிகமாக கூகுள் பண்ணப்பட்ட நடிகைகள் பட்டியலில் பாலிவுட்டின் முன்னணி ஹீரோயின் கரீனா கபூருக்கு 4வது இடம் தான்.

பிளேபாய் கேர்ள் ஷெர்லின் சோப்ரா
பிளேபாய் பத்திரிக்கைக்காக முழு நிர்வாணப் போஸ் கொடுத்துவிட்டு வந்து அதைப் பற்றி பெருமையடித்த பாலிவுட் நடிகை ஷெர்லின் ஷோப்ரா கரீனாவுக்கு அடுத்தபடியாக கூகுள் பண்ணப்பட்டவர் ஆவார்.


Click it and Unblock the Notifications











