சப்தகிரி வெட்ஸ் சன்னி லியோன்... யார் அந்த சப்தகிரி?

By Vignesh Selvaraj

ஐதராபாத் : இந்திய இளைஞர்களின் மனதைக் கவர்ச்சியால் கட்டியிழுத்தவர் நடிகை சன்னி லியோன். பாலிவுட் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் இவர் இப்போது பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்துவிட்டார்.

தற்போது இவரைத் தெலுங்கு சினிமா பக்கம் இழுக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகிறதாம். இந்தியில் ஹிட்டான 'ஜாலி எல் எல் பி' படத்தை இப்போது தெலுங்கில் ரீமேக் செய்கிறார்களாம்.

Sunny weds saptagiri.. who is that saptagiri

இதற்கு 'சப்தகிரி எல் எல் பி' எனப் டைட்டில் வைத்துள்ளார்கள். இந்தப் படத்தில் டோலிவுட் ஸ்டார் காமெடியனான சப்தகிரி, அக்‌ஷய்குமார் ரோலில் நடிக்கிறார். 'சப்தகிரி எல் எல் பி' டீசர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

அதில் பேசிய நடிகர் சப்தகிரி, இப்படக்குழு அடுத்து 'சப்தகிரி வெட்ஸ் சன்னி லியோன்' என ஒரு படம் எடுக்கயிருக்கிறார்கள். இதில் சன்னி லியோன் முக்கிய ரோலில் நடிக்கவுள்ளார் எனக் கூறியுள்ளார்.

நடிகை சன்னிலியோன் தமிழில் 'வடகறி' படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார். தெலுங்கு சினிமாவில் நடிக்கத் தொடங்கினால் அடுத்து தமிழில் மீண்டும் தலைகாட்டும் வாய்ப்பு உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X