"மண்டேலா".. ஒரே படத்தில் சிக்ஸர் அடித்த யோகி பாபு.. ஓடி வந்து பாராட்டிய ஐபிஎல் வீரர்!

சென்னை : மண்டேலா படம் பார்த்த கிரிக்கெட் வீரர் ஸ்ரீவட்ஸ் கோஸ்சுவாமி யோகிபாபுவுடன் வீடியோ காலில் பேசியுள்ளார் .

Recommended Video

Yogi Babu சொந்த ஊரில் Cricket விளையாடிய Video வைரலாகியுள்ளது | Mandela, Karnan

இயக்குனர் பாலாஜி மோகன் தயாரித்திருக்கும் இப்படத்தை புதுமுக இயக்குனர மடோன் அஷ்வின் இயக்கி உள்ளார்.

நகைச்சுவை நடிகராக இருந்த யோகிபாபு தர்மபிரபு திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மண்டாலா திரைப்படத்தில் நடித்து அசத்தி இருப்பார்.

ஷீலா ராஜ்குமார்

ஷீலா ராஜ்குமார்

ஒய்நாட் ஸ்டுடியோஸ் சகிகாந்த் வழங்க, பாலாஜி மோகன் தயாரித்துள்ள இப்படத்தை மடோன் அஸ்வின் இயக்கி உள்ளார்.இப்படத்தில் யோகிபாபுக்கு ஜோடியாக அழகிய தமிழ் மகள் என்ற சீரியல் மூலம் பிரபலமான ஷீலா ராஜ்குமார் நடித்துள்ளார். மேலும், சங்கிலி முருகன், கண்ணன் ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பஞ்ச் வசனம்

பஞ்ச் வசனம்

இத்திரைப்படம் ஏப்ரல் 4ந் தேதி தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பானது. இதில் ஒரு சாமானியனின் ஒரு ஓட்டு எவ்வளவு முக்கியம் என்பதையும் இப்படம் எடுத்துரைத்துள்ளது. மேலும், நோட்டாவது கோட்டாவது காசு கொடுத்தாத்தான் ஓட்டு என்ற பஞ்ச் வசனம் வாக்குப்பதிவின் போது பரபரப்பாக பேசப்பட்டது. விமர்சன ரீதியாக இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

சட்டப்படி நடவடிக்கை

சட்டப்படி நடவடிக்கை

தமிழ்நாடு முடித்திருத்துவோர் நலச்சங்கத்தினர் சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் யோகிபாபு மீது புகார் அளித்துள்ளனர். இதில் மண்டாலா படத்தில் இடம் பெற்றுள்ள பல காட்சிகள் முடித்திருத்துவோர் மனதை புண்படுத்தும் வகையில் அமைத்திருப்பதாக கூறியுள்ளனர். மேலும் இப்படத்தை ஒளிபரப்பிய தனியார் தொலைக்காட்சி மீதும், தயாரிப்பாளர் மீதும், இயக்குனர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கொடுக்கப்பட்டுள்ளது.

யோகிபாபுவுடன் வீடியோ காலில்

யோகிபாபுவுடன் வீடியோ காலில்

இந்நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் ஸ்ரீவட்ஸ் கோஸ்வாமி மண்டேலா படம் பார்த்து விட்டு ட்விட்டரில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, சில நாட்களுக்கு முன்னர் மண்டேலா பார்த்தேன். யோகி பாபுவின் நடிப்பைக் கண்டு வியந்தேன். என்ன ஒரு நடிகர். என்ன ஒரு கதை, யோகி பாபு நடராஜனின் நண்பர் என்பதை அறிந்தேன். அவர் என்னை யோகி பாபுவுடன் வீடியோ காலில் பேச வைத்தார். ரசிகருக்கான தருணம் அது என்று கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X