வேலையில்லா பட்டதாரி, டாணா, சலீம்.... சன்டிவிக்கு 'பார்சேல்'!
தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி, சிவகார்த்திக்கேயன் நடித்துக்கொண்டிருக்கும் டாணா, விஜய் ஆன்டணி நடித்த சலீம் ஆகிய படங்களில் சேட்டிலைட் உரிமங்களை சன்டிவி வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதிய திரைப்படங்களில் சேட்டிலைட் உரிமங்களைப் பெருவதற்கு இப்போது சேனல்களிடையே பெரும் போட்டியே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
சன், விஜய், ஜெயா, ராஜ், கலைஞர், ஜீ தமிழ் என சேனல்கள் போட்டி போட்டு விடுமுறை நாட்களில் புதிய திரைப்படங்களை ஒளிபரப்புகின்றன.
பண்டிகை நாட்களில் திரைக்கு வந்து சில மாதங்களே ஆன திரைப்படங்களை ஒளிபரப்ப ரிலீஸ் ஆன திரைப்படங்களின் சேட்டிலைட் உரிமங்களை தயாரிப்பாளர்களிடம் இருந்து பெற வேண்டும்.
நடிகர்களுக்கு இருக்கும் வரவேற்பைப் பொருத்து பூஜை போடும் போதே சேட்டிலைட் உரிமத்திற்கான போட்டி ஆரம்பமாகிவிடும்.

வேலையில்லா பட்டதாரி
தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி வரும் 18ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த திரைப்படத்தின் சேட்டிலைட் உரிமத்தை சன்டிவி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சலீம்
விஜய் அன்டணி நடித்த சலீம் திரைப்படமும் இப்போது சன்டிவி வசமாகியுள்ளதாம்.

சிவகார்த்திக்கேயன் படம்
நடிகர் சிவகார்த்திக்கேயன் போலீசாக நடித்துக்கொண்டிருக்கும் டாணா திரைப்படம் சன்டிவி வசமாகியுள்ளது.

விஜய் விட்டுருச்சேப்பா
மெரினா, எதிர்நீச்சல் என சிவகார்த்திக்கேயன் நடித்த திரைப்படங்களின் சேட்டிலைட் உரிமத்தை பெரும்பாலும் விஜய் டிவிதான் பெரும். ஆனால் சமீபகாலமாக சிவகார்த்திக்கேயன் படங்களுக்கு தனி வரவேற்பு இருப்பதால் ரேஸில் சன் டிவி முந்திவிட்டது என்கின்றனர்.


Click it and Unblock the Notifications