twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    5 நிமிடத்தில் கதாநாயகிக்கு 100 முத்தம்… மனைவி முன் நடிக்க அஞ்சிய விஷ்ணு

    By Mayura Akilan
    |

    நீர்பறவை படத்தில் "தேவன் மகளே... தேவன் மகளே..." பாடலில் நூறு முத்தக் காட்சி இடம்பெற்றுள்ளது. இதனை தன் மனைவி முன் படமாக்கவேண்டாம் என்று இயக்குநரிடம் கேட்டுக்கொண்டராம் நாயகன் விஷ்ணு. இந்த படத்தை தியேட்டரில் மனைவியுடன் பார்க்க கூச்சமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார் விஷ்ணு.

    பாடல் அமைந்துள்ள பின்னணி

    பாடல் அமைந்துள்ள பின்னணி

    தீபாவளி தினத்தன்று சன் டிவியில் "நீர்பறவை கொண்டாட்டம்" சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பானது. படத்தின் இயக்குநர் சீனு ராமசாமி, இசையமைப்பாளர் ரகுநந்தன், கதாநாயகன் விஷ்ணு, நாயகி சுனைனா பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களை பின்னணிப் பாடகர்கள் பாடினார்கள். படத்தில் பாடல் அமைந்துள்ள பின்னணி குறித்து சீனு ராமசாமி விளக்கினார்.

    தேவன் மகளே தேவன் மகளே...

    தேவன் மகளே தேவன் மகளே...

    "தேவன் மகளே தேவன் மகளே....

    சிலுவைக் காடு பூத்தது போல சிறியோன் வாழ்வை பூக்க வைத்தாயே தேவன் மகளே நன்றி"

    என்ற பாடலை பாடகர் பிரசன்னாவும், பாடகி சைந்தவியும் பாடினர். பிரிந்திருந்த காதலர்கள் இணையும் போது இந்தப் பாடல் இடம் பெறுவதாக கூறிய இயக்குநர், இதில் முத்தம் மூலம் இருவரும் அன்பை வெளிப்படுத்துகின்றனர் என்று கூறினார்.

    5 நிமிடத்தில் நூறு முத்தம்

    5 நிமிடத்தில் நூறு முத்தம்

    5 நிமிடத்தில் நூறு முத்தம் இடம்பெற்றுள்ள இந்த பாடலை படமாக்கும் போது நடிகர் விஷ்ணு தன் மனைவி முன் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டார் என்றார் சீனு ராமசாமி. விஷ்ணுவின் மனைவி தன்னிடம் உதவி இயக்குநராக பணிபுரிகிறார் என்ற கூடுதல் தகவலையும் சொன்னார் சீனு ராமசாமி. இதை ஒத்துக் கொண்ட நடிகர் விஷ்ணு படத்தில் இடம் பெற்றுள்ள முத்தக்காட்சியை மனைவியோடு பார்க்க முடியாது. எனவே என் மனைவியுடன் இந்த படத்தை தியேட்டரில் பார்க்க மாட்டேன் என்று கூறினார்.

    தேசிய விருது நிச்சயம்

    தேசிய விருது நிச்சயம்

    நீர்பறவை படத்தின் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின், உணர்வுகளை வெளிப்படுத்தும் இதுபோன்ற படத்தை தயாரிப்பதற்கு பெருமைப்படுவதாக கூறினார். நாயகனும், நாயகியும் போட்டி போட்டுக் கொண்டு நடித்துள்ளனர் யாருக்கு தேசிய விருது கிடைக்கிறதோ தெரியவில்லை என்றும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். வைரமுத்து, ரகுநந்தன், சீனு ராமசாமி கூட்டணியில் ஏற்கனவே தேசிய விருது கிடைத்துள்ளது. இந்த படத்திற்கும் கண்டிப்பாக தேசிய விருது நிச்சயம் கிடைக்கும் கூறினார் உதயநிதி ஸ்டாலின்.

    உடம்பெல்லாம் புல்லரிக்குதுப்பா

    உடம்பெல்லாம் புல்லரிக்குதுப்பா

    இந்த படத்தில் இசை அமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமார் ஒரு பாடலை பாடியுள்ளார். அதை நிகழ்ச்சியில் பாடிக் காட்டினார்.

    பற பறவென பறவை ஒன்று...

    கிறு கிறு வென தலையும் சுற்றி...

    உன் காலில் வீழ்ந்த்து ஜீவிக்கவா?

    அது பறக்க வானம் இல்லை...

    அது வாழ்ந்திட பூமியும் இல்லை

    உன் மார்பில் கூடு கட்டி வளர்க்கவா?....

    என்று உருகி உருகி ஜீ.வி பிரகாஷ் குமார் பாடி முடித்த உடன் உதயநிதியும், விஷ்ணுவும் உடம்பெல்லாம் புல்லரிக்குதுப்பா என்று ஒன்றாக கூறினர்.

    ரசனையான பாடல்கள், ரசிக்கும் படியாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளர்கள் என கலகலப்பாக அமைந்தது நீர்பறவை கொண்டாட்டம் நிகழ்ச்சி.

    English summary
    Neerparavai Kondattam Special program telecasted on Sun TV on November 13.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X