ராயப்பனோட வண்டி நம்பர் என்ன?.. சன் டி.வியின் புது யுக்தி
சென்னை : சன் தொலைக்காட்சி பொங்கலுக்கு பிகில் படத்தை ஒளிப்பரப்ப உள்ளது. இதை வித்தியாசமான முறையில் விளம்பரப்படுத்திய சன் தொலைக்காட்சி, ராயப்பன் காரின் நம்பர் என்ன என்று கேள்வி ஒன்றை கேட்டுள்ளது.
தீபாவளிக்கு வெளியாகிய பிகில் படம் மாபெரும் வெற்றியை பெற்றது . இந்த படத்தின் சேட்டிலைட் உரிமையை சன் தொலைகாட்சி பெற்றிருந்தது. தற்போது வரும் பொங்களுக்கு சன் தொலைக்காட்சி பிகில் படத்தை ஒளிப்பரப்ப திட்டமிட்டுள்ளது .

இதை விளம்பரப்படுத்த வித்தியாசமான யுக்தியை கையில் எடுத்துள்ளது சன் தொலைக்காட்சி. அது என்னவென்றால் சன் தொலைக்காட்சி தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் விஜய் ரசிகர்களுக்கு கேள்வி ஒன்றை கேட்டு இருக்கிறது.
அதில் ராயப்பன் காரின் நம்பர் என்ன என்று கேட்டு இருக்கிறார்கள் .மேலும் ராயப்பனோட ரசிகர்களுக்கு மட்டும் தான் இதற்கு பதில் தெரியும் என்று கூறியுள்ளனர் . இது தற்போது சன் தொலைக்காட்சி பயன்படுத்தி வரும் புதிய யுக்தியாகும். இதனை கண்ட விஜய் ரசிகர்கள் ஏராளமானவர்கள் ட்விட்டரில் வந்து அதற்கான பதில்களை சட்டென்று தந்து உள்ளனர் .
ராயப்பனின் காரின் என் எம் டி யூ 9156 ஆகும் இதனை ரசிகர்கள் உடனடியாக கூறிவிட்டனர் . பிகில் படத்தில் ராயப்பன் கதாபாத்திரம் சிறிது நேரமே வந்து இருந்தாலும் அந்த கதாபாத்திரத்தின் தாக்கம் படம் முழுக்க இருக்கும் . முக்கியமாக ராயப்பன் கதாபாத்திரம் பேசும் 'கப்பு முக்கியம் பிகிலே ' என்ற வசனம் பெரிதும் பிரபலமடைந்தது .
பிகில் படத்தில் விஜயுடன் நயன்தாரா ,யோகிபாபு, ஜாக்கி ஜெராப் , கதிர், இந்துஜா, அம்ரிதா, வர்ஷா, சாய்தீனா, ஆனந்த்ராஜ் போன்ற பலரும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.
பிகில் படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேஷான் நிறுவனம் வைத்து இருக்கிறது . கடந்த மாதமே பிகில் படம் அமேஷானில் வெளியிடபட்டது . இதுவரையில் பல லட்ச உலக மக்கள் நேரடியாக படத்தை இணையம் வாயிலாக பார்த்துள்ளனர். அதனை அடுத்து தற்போது சன் தொலைகாட்சியில் பொங்கலை திருநாளை முன்னிட்டு ஜனவரி 15 மாலை 6.30 மணிக்கு பிகில் படம் ஒளிப்பரப்ப உள்ளது. பொங்கல் கொண்டாட்டம் பிகில் கொண்டாட்டம் என விஜய் ரசிகர்களுக்கு சீறும் சிறப்புமாய் அமைந்துள்ளது இந்த பொங்கல்.


Click it and Unblock the Notifications











