twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கொடிய தொற்றில் இருந்து மீள்கிறது... கொரோனாவுக்கு பின் சீனாவில் ரிலீஸாகும் முதல் இந்திய படம் இதுதான்!

    By
    |

    சென்னை: கொரோனாவால் அடைக்கப்பட்டிருந்த தியேட்டர்கள் திறக்கப்பட்டதும் சீனாவில் திரையிடப்படும் முதல் இந்தி படம் இதுதான் என்று கூறப்படுகிறது.

    Recommended Video

    90's KIDS AFTER LOCKDOWN ENDS | MAHADHI TROLL | FILMIBEAT TAMIL

    சீனாவின் வுஹானில் உருவான கொரொனா வைரஸ், இன்று உலகம் முழுவதும் பரவி உள்ளது.

    அமெரிக்கா, இத்தாலி, ஐரோப்பிய நாடுகளில் இந்த வைரஸ் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அதை மட்டும் தயவு செய்து மறுபரிசீலனை செய்யுங்க.. தமிழக அரசுக்கு ராகவா லாரன்ஸ் திடீர் வேண்டுகோள்! அதை மட்டும் தயவு செய்து மறுபரிசீலனை செய்யுங்க.. தமிழக அரசுக்கு ராகவா லாரன்ஸ் திடீர் வேண்டுகோள்!

    அதிகரிக்கும் எண்ணிக்கை

    அதிகரிக்கும் எண்ணிக்கை

    இதைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இருந்தாலும் இந்த வைரச் அதிகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் இதன் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8473 ஆக உயர்ந்துள்ளது. 273 பேர் பலியாகி உள்ளனர்.

    தடுப்பு நடவடிக்கை

    தடுப்பு நடவடிக்கை

    இரண்டு நாட்களுக்கு முன் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், இந்த எண்ணிக்கை இப்போது 8473 ஆக அதிகரித்துள்ளது. பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும் கொரோனா வைரசின் தாக்கம் குறையவில்லை. நாளை வரை பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படும் என்று தெரிகிறது.

    சினிமா தியேட்டர்கள்

    சினிமா தியேட்டர்கள்

    இந்நிலையில், சீனாவில் இந்த வைரஸ் தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த வைரஸ் உருவான வூஹானில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. நிலைமை சீராகி வருகிறது. இதையடுத்து அங்கு மூடப்பட்டுள்ள சினிமா தியேட்டர்கள் விரைவில் மீண்டும் திறக்கப்பட உள்ளன. திறந்ததும் ஹிர்த்திக் ரோஷன் நடித்துள்ள 'சூப்பர் 30' என்ற இந்திப் படம் திரையிடப்பட உள்ளது.

    ரிலையன்ஸ்

    ரிலையன்ஸ்

    கொரோனா தாக்கத்துக்குப் பிறகு அங்கு திரையிடப்படும் முதல் இந்திய சினிமா இதுதான். இதை ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சிஇஓ, ஷிபாஷிஸ் சர்கார் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த படம் சீன சென்சாருக்கு அனுப்பப்பட்டுள்ளது. நிலைமை சரியான பிறகு சென்சார் செய்யப்படும் முதல் படமாக இது இருக்கும். பிறகு படம் ரிலீஸ் ஆகும் என்று தெரிவித்துள்ளார்.

    சூப்பர் 30

    சூப்பர் 30

    பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்தவர், ஆனந்த் குமார் (37) என்ற கணித ஆசிரியர், சூப்பர் 30 என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். இதன் மூலம், ஏழை மாணவர்கள் 30 பேரைத் தேர்ந்தெடுத்து ஜேஇஇ நுழைவுத்தேர்வுக்கு ஒவ்வொரு வருடமும் தயார்படுத்தி வெற்றி பெற வைக்கிறார். அவர்களின் செலவையும் அவரே ஏற்கிறார்.

    ஹிர்த்திக் ரோஷன்

    ஹிர்த்திக் ரோஷன்

    இவரது வாழ்க்கை கதையை மையப்படுத்திதான் இந்த படம் உருவாக்கப்பட்டது. ஹிர்த்திக் ரோஷன், ஆனந்த் குமார் என்ற கேரக்டரில் நடித்திருந்தார். மிருணாள் தாகூர், ஆதித்யா ஶ்ரீவஸ்தவா, நதிஷ் சாந்து, பங்கஜ் திரிபாதி உட்பட பலர் நடித்திருந்தனர். குயின் இயக்குனர் விஷால் பால் இயக்கி இருந்தார்.

    English summary
    Hrithik’s Super 30 will be first Bollywood film to release in China after coronavirus pandemic.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X