எனக்கு தம்பி பாப்பா பிறந்திருக்கான்.. சூப்பர் டீலக்ஸ் பட நடிகரின் சந்தோஷமான அறிவிப்பு!

சென்னை: சூப்பர் டீலக்ஸ் பட நடிகர் தனக்கு தம்பி பாப்பா பிறந்திருப்பதை படு சந்தோஷமாக அறிவித்துள்ளார்.

விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான படம் சூப்பர் டிலக்ஸ். தியாகராஜன் குமாரராஜா இந்த படத்தை இயக்கியிருந்தார்.

விஜய் சேதுபதி, பகத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், விஜய் ராம், அப்துல் ஜபார் மற்றும் நவீன் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்தனர்.

சூப்பர் டீலக்ஸ் - ஒளிப்பதிவு

சூப்பர் டீலக்ஸ் - ஒளிப்பதிவு

மிஷ்கின், காயத்ரி மற்றும் பகவதி பெருமாள் ஆகியோர் துணைக் கதாப்பத்திரத்தில் நடித்தனர். பி.எஸ். வினோத் மற்றும் நீரவ் ஷா ஆகியோர் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்தனர்.

யுவன் சங்கர் ராஜா இசை

யுவன் சங்கர் ராஜா இசை

இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்தார். நலன் குமாரசாமி, நீலன். கே. சேகர், மிஷ்கின் மற்றும் தியாகராஜன் குமாரராஜா ஆகியோர் திரைக்கதை எழுதினர். இந்தப் படம் பாஸிட்டிவான விமர்சனங்களை பெற்றது. 2019 ஆம் ஆண்டில் மெல்பர்னில் நடைபெற்ற இந்தியத் திரைப்பட விழாவில் சினிமாவிற்கான சமத்துவ விருதினை இந்தத் திரைப்படம் பெற்றது.

சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது

சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது

இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி திருநங்கையாக ஷில்பா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்திற்காக நடிகர் விஜய் சேதுபதி சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை பெற்றார்.

விஜய் சேதுபதியின் மகனாக அஸ்வந்த்

விஜய் சேதுபதியின் மகனாக அஸ்வந்த்

இந்தப் படத்தில் ராசுக்குட்டி கதாப்பாத்திரத்தில் விஜய் சேதுபதியின் மகனாக நடித்தவர் அஸ்வந்த் அசோக் குமார். இவர் 2016ஆம் ஆண்டு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று டைட்டில் வென்றார். சீரியல்களிலும் நடித்துள்ளார் அஸ்வந்த் அசோக் குமார்.

தனுஷின் ஜகமே தந்திரம் படம்

தனுஷின் ஜகமே தந்திரம் படம்

நயன்தாரா நடிப்பில் வெளியான ஐரா படத்திலும் நடித்தார் அஸ்வந்த் குமார். மேலும் கார்த்தி ஜோதிகா நடிப்பில் வெளியான தம்பி படத்திலும் நடித்திருந்தார் அஸ்வந்த் அசோக் குமார். மேலும் தனுஷின் ஜகமே தந்திரம் படத்திலும் நடித்துள்ளார். தற்போது பாலாஜி சக்தி வேல் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத படத்திலும் நடித்து வருகிறார் அஸ்வந்த் அசோக் குமார்.

எனக்கு தம்பி பாப்பா பிறந்திருக்கிறான்

எனக்கு தம்பி பாப்பா பிறந்திருக்கிறான்

இந்த நிலையில் அஸ்வந்த் தாயாருக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அடுத்து தனக்கு தம்பி பாப்பா பிறந்திருக்கிறான் என்று மிகவும் மகிழ்ச்சியுடன் தனது சமூக வலைத்தளத்தில் அஸ்வந்த் குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது தம்பியுடன் இருக்கும் புகைப்படத்தையும் அவர் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

அஸ்வந்துக்கு குவியும் வாழ்த்து

அஸ்வந்துக்கு குவியும் வாழ்த்து

இதனை பார்த்த நெட்டிசன்கள் அஸ்வந்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் உங்களை போன்றே உங்கள் தம்பியையும் நடிகராக கொண்டு வந்துவிடுங்கள், என தெரிவித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X