இளையராஜா ஒரு வனதேவதை.. சூப்பரா பேசி அசத்திய சூப்பர் டீலக்ஸ் இயக்குநர்.. அரங்கமே அதிர்ந்தது!

சென்னை: இளையராஜா பயோபிக்கில் நடிகர் தனுஷ் நடிக்க உள்ள நிலையில், அதன் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் இன்று திரையுலக பிரபலங்கள் பங்கேற்க கோலாகலமாக நடைபெற்றது. இளையராஜா, பாரதி ராஜா, தனுஷ், கமல்ஹாசன், அருண் மாதேஸ்வரன், வெற்றிமாறன், தியாகராஜன் குமாரராஜா உள்ளிட்ட பல்வேறு இயக்குநர்களும் பிரபலங்களும் பங்கேற்றனர்.

இளையராஜா பற்றி தமிழ் சினிமாவில் பேச சொன்னால் எல்லா பிரபலங்களும் போட்டிப் போட்டு மணிக்கணக்கில் பேசிக் கொண்டே இருப்பார்கள். இளையராஜாவின் இசை 50 ஆண்டுகளை கடந்து இன்னமும் ரசிகர்களை ரசிக்க வைத்துக் கொண்டே இருக்கிறது. கடைசியாக விடுதலை படத்துக்கு அவர் இசையமைத்த பாடல்கள் கூட ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

Super Deluxe Director Thiagarajan Kumararaja superb speech at Ilayaraja biopic event

கமல் முதல் பாரதிராஜா வரை: பாரதிராஜா இயக்கிய கிராமத்துப் படங்களுக்கும் கமல்ஹாசன் நடித்த பல படங்களுக்கும் இசையமைத்துள்ளார் இளையராஜா. அவரது பயோபிக் ஆரம்பமாகும் நிகழ்ச்சியில் இவர்கள் இருவரும் பங்கேற்காமல் எப்படி என்கிற நிலையில், இருவரும் கலந்து கொண்டு இளையராஜாவின் போற்றி பாடி அவரை சந்தோஷத்தில் ஆழ்த்தினர்.

தனுஷ் சரியான தேர்வு: இளையராஜா பயோபிக்கில் நடிக்க தனுஷ் தான் சரியான தேர்வு என்றும் இளையராஜா இளைமைக் காலத்தில் ஒல்லியாக எப்படி இருந்தாரோ அதே போல சென்னை சென்ட்ரல் அருகே ஹார்மோனிய பெட்டியுடன் தனுஷ் பேக் ஷாட்டில் நிற்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே பல கதைகளை சொல்கிறது. இளையராஜா பயோபிக்கை எங்கிருந்து தொடங்கி எப்படியெல்லாம் கொண்டு போக போகிறாரோ அருண் மாதேஸ்வரன் என்கிற கேள்வியும் ஆவலும் அனைத்து பிரபலங்கள் மத்தியிலும் இருந்தது அவர்கள் பேசும் போதே எதிரொலித்தது.

இளையராஜா ஒரு வனதேவதை: இளையராஜா போல ஒரு டெக்னிஷன் வாழ்ந்தார் என்று சொன்னால் கூட வருங்காலத்தில் யாரும் நம்ப மாட்டார்கள். அப்படியொரு ஆளுமை, அப்படியொரு எளிமை மனம் கொண்டவர் இளையராஜா. அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்தால் தவற விட்டு விடாதீர்கள். அவர் ஒரு வனதேவதை அவரிடம் என்ன வரம் கேட்டாலும் கிடைக்கும். அந்த அளவுக்கு அனைத்திலும் ஞானம் மிக்கவர் இசைஞானி இளையராஜா. எனக்கு அவருடன் இணைந்து பணியாற்ற கிடைத்த வாய்ப்பை வரமாக கருதுகிறேன்.

தனுஷ் இருக்க என்ன வேண்டும்: கிட்டத்தட்ட 30 நாட்கள் அவருடன் இணைந்து பணியாற்றி இருப்பேன். பல கதைகளை சொல்வார். இளையராஜாவின் பயோபிக்கை எப்படி எடுப்பார்கள் என்கிற கேள்வி எனக்குள் இருக்கிறது. ஆனால், அந்த அச்சமெல்லாம் இல்லாத ஒரு இயக்குநரான அருண் இளையராஜா படத்தை சிறப்பாக எடுப்பார் என நம்புகிறேன். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் நடிக்கக் கூடிய தனுஷ் இருக்கும் நிலையில், வேறு என்ன வேண்டும் என பட்டாசாக சூப்பர் டீலக்ஸ் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா பேச அரங்கமே கரவொலி எழுப்பியது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X