சூப்பர் டீலக்ஸ் ஷில்பா... பாட்டாளி வடிவு... உங்களுக்கு யார பிடிச்சிருக்கு!
சூப்பர் டீலக்ஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.
சென்னை: சூப்பர் டீலக்ஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகிய சிறிது நேரத்திலேயே, வடிவேலுவின் பல கெட்டப் போட்டோக்கள் வெளியாகி டிரெண்டிங்காகி இருக்கின்றன.
ஆரண்யகாண்டம் படத்தை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா தற்போது இயக்கி வரும் படம் 'சூப்பர் டீலக்ஸ்'. இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி ஷில்பா எனும் திருநங்கை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஃபகத் ஃபாசில், மிஷ்கின், பகவதி பெருமாள் , சமந்தா, ரம்யா கிருஷ்ணன், காயத்ரி, விஜய் ராம் என ஒரு நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் நடிக்கிறது.
தமிழ் சினிமாவில் டிரெண்ட் செட்டராக வெளிவந்த ஆரண்யகாண்டம் எடுத்து, 8 ஆண்டுகள் கழித்து தியாகராஜன் குமாரராஜா இயக்கியிருக்கும் படம் என்பதால், சூப்பர் டீலக்ஸ் படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

திருநங்கை ஷில்பா
ஏற்கனவே இப்படத்தில் லேடி கெட்டப்பில் விஜய் சேதுபதி தோன்றும் புகைப்படம் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நேற்று சூப்பர் டீலக்ஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி அதைவிட பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

விஜய் சேதுபதி இடத்தில் வடிவேலு
திருநங்கை ஷில்பாவாக விஜய் சேதுபதி நடுவில் நிற்க, அவரை ரவுண்டு கட்டி மற்ற நடிகர்கள் எல்லாம் இருக்கும் அந்த போஸ்டர் அதிகமாக பகிரப்பட்டது. இந்நிலையில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகிய சில மணி நேரத்தில், அதே போஸ்டரில் அனைத்து நடிகர்களுக்கும் பதிலாக வெரைட்டியான கெட்டப்பில் வடிவேலு இருக்கும் போஸ்டர் வெளியானது.

யார் செய்த வேலை
இது யார் செய்த வேலை என அனைவரும் குழம்பிக் கொண்டிருந்த நிலையில், அது வேறு யாரும் இல்ல நான் தான் என்று சஸ்பென்சுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா. படத்தின் புரொமோஷனுக்காக படக்குழுவே செய்த வேலை தான் இது என தெளிவுபடுத்தி இருக்கிறார்.

வடிவா... ஷில்பாவா
இதையடுத்து சூப்பர் டீலக்ஸ் ஷில்பா பிடிச்சிருக்கா, இல்ல பாட்டாளி வடிவு பிடிச்சிருக்கா என்ற விவாதம் இணையத்தில் தொடங்கிவிட்டது. சரி உங்களுக்கு யார பிடிச்சிருக்கு... ஷில்பாவையா வடிவையா...


Click it and Unblock the Notifications











