Super Deluxe: இந்த ஒரு 'சீன்' போதும்... விஜய் சேதுபதியின் வாழ்நாள் முழுவதும் பேசும்!

சூப்பர் டீலக்ஸ் படத்தில் மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி.

Recommended Video

Super Deluxe Movie Audience Review: விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் படம் எப்படி இருக்கு?- வீடியோ

சென்னை: சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஷில்பாவாக நடித்துள்ள விஜய் சேதுபதி, ஒரு காட்சியில் பயங்கர மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

ஆரண்ய காண்டம் படத்தை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா, 8 வருடங்களுக்கு பிறகு இயக்கியுள்ள திரைப்படம். விஜய் சேதுபதி, பகத் பாசில், சமந்தா, மிஷ்கின், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

விஜய் சேதுபதியின் நடிப்பு

விஜய் சேதுபதியின் நடிப்பு

இந்த படத்தில் ஷில்பா எனும் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பு திறமை பற்றி யாருக்கும் சொல்லி தெரிய வேண்டியதில்லை. ஆனால் இந்த படத்தில் இவரது நடிப்பு, மிகச் சிறப்பாக உள்ளது.

பிரம்மிக்க வைக்கும் நடிப்பு

பிரம்மிக்க வைக்கும் நடிப்பு

குறிப்பாக ஒரு காட்சியில் பிரம்மிக்க வைக்கும் வகையிலான நடிப்பை அவர் வெளிப்படுத்தியுள்ளார். அதாவது, காவல் நிலையத்தில் தன்னிடம் தகாத முறையில் நடந்துகொள்ளும் உதவி ஆய்வாளரை ஆக்ரோஷமாக அவர் தாக்கும் காட்சி, பார்ப்பவர்களை மிரள செய்யும்.

ஒரு சீன் போதும்

ஒரு சீன் போதும்

'இந்த ஒரு சீன் போதும், விஜய் சேதுபதியின் வாழ்நாள் முழுவதும் இது பேசும்' என அவரது ரசிகர்கள் கொண்டாடுகின்றனர். மற்றொரு காட்சியில், ஒரு கடையில் கைத்தட்டி பணம் கேட்பார். அப்போது ராசுகுட்டி எனும் சிறுவன் 'சூப்பர் பா' என கைத்தட்டி சிரிப்பான். அந்த காட்சியும் ரசிக்கும்படியாக உள்ளது.

ஷில்பாவாக வாழ்ந்திருக்கிறார்

ஷில்பாவாக வாழ்ந்திருக்கிறார்

'96' படத்திற்கு பிறகு விஜய் சேதுபதியின் நடிப்பு இந்த படத்தில் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது. செயற்கை தன்மை இல்லாத தனது இயல்பான நடிப்பால், ஷில்பாவாகவே வாழ்ந்திருக்கிறார் விஜய் சேதுபதி. ஒரு நடிகனுக்கு இமேஜ் இருக்கக் கூடாது என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார் மனிதர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X