விஜய் சேதுபதி நீங்க ரிடையர் ஆகிடுங்க: சூப்பர் டீலக்ஸ் ட்விட்டர் விமர்சனம்
Recommended Video

சென்னை: சூப்பர் டீலக்ஸ் படத்தை பார்த்தவர்கள் அனைவரும் அருமை, சிறப்பு, சூப்பர் என்கிறார்கள்.
தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்த சூப்பர் டீலக்ஸ் படம் இன்று ரிலீஸாகியுள்ளது.
படத்தை பார்த்தவர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்திய சினிமா
அண்மை காலத்தில் தமிழ் திரையுலகில் வெளியான சிறந்த படம் அல்ல சூப்பர் டீலக்ஸ். மாறாக சமீபத்தில் வெளியான இந்திய சினிமாவின் சிறந்த படம்.
ரம்யா கிருஷ்ணன்
என்ன ஒரு படம். படம் எப்படி எடுக்க வேண்டும் என்பதற்கு உதாரணம். இது பல இளம் இயக்குநர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும். சமந்தாவின் நடிப்பு அருமை. அழகாக தெரிகிறார். விஜய் சேதுபதியின் அர்ப்பணிப்பு வேற லெவல்.
நடிப்பு
விஜய் சேதுபதி நீங்கள் வேண்டுமானால் நடிப்பில் இருந்து ஓய்வு பெறுங்கள். சூப்பர் டீலக்ஸ் படம் மூலம் நடிப்பின் உச்சத்தை தொட்டுவிட்டீர்கள். அது உங்கள் வாழ்நாள் முழுவதும் உடன் வரும்.
பாராட்டு
சூப்பர் டீலக்ஸ் படத்தை பார்த்த அனைவரும் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். அனைத்து கதாபாத்திரங்களும் சிறப்பாக அமைந்துள்ளது என்கிறார்கள்.
தமிழ் படம்
இனிமே ஹாலிவுட் மாதிரி படம் எடுங்கன்னு சொல்ல மாட்டாங்க #SuperDeluxe மாதிரி படம் எடுன்னு சொல்லுவாங்க உலக சினிமாக்களையே மிஞ்சும் ஒரு தமிழ்படம் @itisthatis @Samanthaprabhu2 @VijaySethuOffl


Click it and Unblock the Notifications











