சூப்பர் டூப்பரில் ஹீரோயின் முத்தமழை... நாள் முழுக்க நனைந்த நடிகர் துருவா

By R VINOTH

சென்னை: இளம் நடிகர் துருவா இளம் நடிகை இந்துஜாவும் ஜோடி நடிச்சிக்கிட்டு இருக்குற சூப்பர் டூப்பர் படத்துல ஒரு முத்தம்தான் திருப்புமுனையை தரப்போகுதாம். காலைல இருந்து சாயந்திரம் வரைக்கும் அந்த முத்தம் கொடுக்குற சீன் மட்டுமே எடுத்திருக்காங்கலாம். இந்தப் படத்துல ஹீரோ, ஹீரோயின் இரண்டு பேருக்கும் செமயா கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட் ஆனதாவும் துருவ் சொல்லியிருக்கார்.

இந்தப் படத்துல ஸ்ரீராம் பார்த்தசாரதி பாடுன மெலடி சாங்க இந்துஜா தான் தன்னோட பிறந்த நாளான ஆகஸ்டு 1ஆம் தேதி தன்னோட ட்விட்டர் மூலமா ரிலீஸ் பண்ணிருக்காங்க. இப்போ படத்தோட சூப்பர் சீன்ஸ் பத்தியும் நாயகி இந்துஜாவ பத்தியும் சூப்பர் டூப்பர் நாயகன் துருவா சும்மா புகழ்ந்து தள்ளியிருக்கார். படத்துல தன்னோட எக்ஸ்பீரியன்ஸ் நம்மகிட்ட ஷேர் பண்ணியிருக்கார் துருவா

Super duper turning point kiss says Dhruva

சூப்பர் டூப்பர் படத்துல இந்துஜா நடிக்க மொதல்ல சம்மதிக்கவே இல்ல. ஏன்னா நான் புதுமுக நடிகர் அப்படிங்கிறத மனசல நெனச்சிக்கிட்டு, என்னோட நடிக்கிறது சரியா வருமா அப்படின்னு ரொம்ப தயங்குனாங்க. ஆனா நா தொடர்ந்து ஒரு மாசமா விடாம போராடி, அவங்கள நடிக்குறதுக்கு சம்மதிக்க வச்சேன்.

சூப்பர் டூப்பர் படத்துல நடிக்கிறப்போ ரெண்டு பேருக்குமே, பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி, பையாலஜி எல்லாம் பக்காவா ஒர்க்கவுட் ஆச்சி.
இந்தப் படத்துல நடிக்குறப்போ இந்துஜாவோடி கவர்ச்சிய பாத்து நான் அப்டியே மெர்சலாயிட்டேன். இந்த படத்துல முக்கியமான டர்னிங் பாய்ன்ட்டே, இந்துஜாவ இறுக்கமா கட்டிப் பிடிச்சி முத்தம் கொடுக்குற சீன்தான். அந்த சீன் மட்டுமே நாள் முழுக்க திரும்ப திரும்ப எடுத்தாங்க.

முத்தம் சீன் ரொம்ப தத்ரூபாமா வரணும்கிறதுக்காகவே திரும்ப திரும்ப எடுத்திருக்காங்க அதிலிருந்தே எவ்வளவு முக்கியமான திருப்புமுனையா இருக்கும்னு படம் பாத்தா தான் நமக்கெல்லாம் புரியும். இந்துஜாவை முத்தம் கொடுத்து நடிக்கிற சீன்ல நடிக்கிறதுக்கு முன்னாடி ஒரு துணை இயக்குநரை கட்டிப்பிடிச்சி ட்ரயல் பார்த்தோம்.

சூப்பர் டூப்பர் படம் 1990ல இருந்து 2000ஆவது வருஷம் வரைக்கும் வந்த தமிழ் படத்துல இருக்குற மாதிரியே, ஹீரோவே, ஆக்சன், காமெடி, ஹீரோயிசம் எல்லாம் சேந்து பண்ணினது மாதிரியே பண்ணியிருக்கோம். அதே மாதிரி இந்தப் படத்தோட பலமே அதோட ஸ்க்ரீன்ப்ளே தான் அப்பிடின்னு எல்லாரும் பேசிக்கிறாங்க.

படத்தோட டைரக்டர் அருண் கார்த்திக்கின் (AK) சொந்த ஊரு, ஈரோடு பக்கம். இவர் பேங்க் வேலையை ரிசைன் பண்ணிட்டு சினிமா மேல இருக்குற அளவுக்கு மீறுன ஆசையில, ரொம்ப நாளா ட்ரை பண்ணி இந்த சான்ஸ வாங்கியிருக்காரு. ரொம்ப பொறுமை சாலியான மனுசன், அப்பிடின்னு துருவா பாராட்டு பத்திரம் வாசிச்சிருக்கார்

படம் ரிலீசாகி வந்ததுக்கு அப்புறம் தான் தெரியும். படத்தோட டர்னிங் பாய்ன்ட்டான அந்த முத்தம் கொடுக்குற சீன் எப்பிடி வந்திருக்குன்னு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X