R B Choudary: கோர விபத்து.. சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பாளர் ஆர்.பி. சவுத்ரி காலமானார்
சென்னை: பிரபல தயாரிப்பாளரும், நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி. சவுத்ரி, ராஜஸ்தானின் ஜோத்பூரில் நிகழ்ந்த சாலை விபத்தில் படுகாயம் அடைந்துள்ளார். தனது பூர்வீக ஊரான ஜோத்பூருக்குச் சென்ற வழியில் இந்த விபத்து ஏற்பட்டதாகத் தெரிகிறது. 'சூப்பர் குட் பிலிம்ஸ்' வாயிலாக 'நாட்டாமை', 'சூரியவம்சம்' போன்ற பல வெற்றிப் படங்களைத் தயாரித்துள்ளார்.
ஜித்தன் ரமேஷ் மற்றும் ஜீவாவின் அப்பாவான ஆர்.பி. சவுத்ரி கார் விபத்தில் உயிரிழந்தது ஒட்டுமொத்த திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியது.

விஜய் வெற்றியை விசில் அடித்து ஆனந்தக் கண்ணீருடன் கொண்டாடிய வீடியொவை நேற்று ஜீவா வெளியிட்டு இருந்த நிலையில், இன்று இப்படியொரு சோகமான செய்தி அவரையும் அவரது குடும்பத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆர்.பி. சவுத்ரி மரணம்: சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் படங்கள் வெளியாகிறது என்றாலே ரசிகர்கள் இயக்குநர்களையோ, ஹீரோக்களையோ கூட பார்க்காமல் நம்பி படத்துக்குச் சென்று பார்ப்பார்கள். ஏகப்பட்ட வெற்றிப் படங்களை பார்த்து பார்த்து கொடுத்த தயாரிப்பாளர் ஆர்.பி. சவுத்ரி கார் விபத்தில் அகால மரணம் அடைந்திருப்பது ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் இவர் படங்களை தயாரித்துள்ளார்.

ஜித்தன் ரமேஷ் - ஜீவா மட்டுமல்ல: மஜ்பீன் என்பவரை திருமணம் செய்துக் கொண்ட ஆர்.பி சவுத்ரிக்கு ஜித்தன் ரமேஷ், ஜீவா மட்டுமின்றி சுரேஷ் மற்றும் ஜீவன் என மேலும், இரு மகன்களும் உள்ளனர். தந்தையின் தயாரிப்பு நிறுவனத்தையும் மற்ற தொழிகளையும் அவர்கள் பார்த்து வருகின்றனர். ஜீவா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான தலைவர் தம்பி தலைமையில் படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
சென்னைக்கு கொண்டு வரப்படும் உடல்: ஆர்.பி. சவுத்ரியின் உடலை நாளை சென்னைக்கு கொண்டு வரும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகர் ஜீவா மற்றும் ஜித்தன் ரமேஷ் உள்ளிட்ட குடும்பத்தினர் ஆர்.பி. சவுத்ரி கார் விபத்தில் மரணம் அடைந்த தகவலை அறிந்து சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications